Published : 23 Jul 2025 06:39 AM
Last Updated : 23 Jul 2025 06:39 AM

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: நாட்​டின் 14-வது குடியரசு துணைத் தலை​வ​ராக ஜெகதீப் தன்​கர் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பதவி​யேற்​றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைய இருந்​தது. இந்​நிலை​யில் தன்​கர் நேற்று முன்​தினம் திடீரென தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். ராஜி​னாமா கடிதத்தை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு அவர் அனுப்பி வைத்​தார்.

‘‘உடல்​நலனுக்கு முன்​னுரிமை அளித்​தும் மருத்​துவ ஆலோ​சனைக்கு கட்​டுப்​பட்​டும் அரசி​யலமைப்பு சட்​டப் பிரிவு 67(ஏ) பிரி​வின் கீழ் குடியரசு துணைத் தலை​வர் பதவியை நான் உடனடி​யாக ராஜி​னாமா செய்​கிறேன்’’ என்று அவர் தனது கடிதத்​தில் குறிப்பிட்டிருந்தார். இந்​நிலை​யில் தன்​கரின் ராஜின​மாவை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஏற்​றுக்​கொண்​ட​தாக மத்​திய உள்துறை அமைச்​சகம் அறி​வித்​துள்​ளது.

குடியரசு துணைத் தலை​வரே நாடாளு​மன்ற மாநிலங்​களவை​யின் தலை​வர் ஆவார். இந்​நிலை​யில் மாநிலங்​களவை தலை​வர் பதவி​யில் இருந்​தும் தன்​கர் வில​கி​யுள்​ளார். நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் தொங்​கி​யிருக்​கும் வேளை​யில் தன்​கர் பதவி வில​கி​யுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x