Published : 22 Jul 2025 07:41 AM
Last Updated : 22 Jul 2025 07:41 AM

2006-ல் 189 பேர் உயிரிழக்க காரணமான மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேர் விடுவிப்பு

கடந்த 2006-ல் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. | படம்: பிடிஐ |

மும்பை: கடந்த 2006-ம் ஆண்டு 189 பேர் உயிரிழக்க காரண​மாக இருந்த மும்பை தொடர் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய 12 பேரை மும்பை உயர் நீதி​மன்​றம் நேற்று விடு​வித்​தது. சிறப்பு நீதி​மன்​றம் விதித்த ஆயுள், மரண தண்​டனை ரத்து செய்​யப்​பட்​டது.

கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகரில் ஓடும் 7 ரயில்​களில், 11 நிமிடங்​களுக்​குள் அடுத்​தடுத்து குண்​டு​கள் தன. இதில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இது தொடர்​பாக மும்பை சிறப்பு நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. விசாரணை​யின் முடி​வில், 12 பேர் குற்​ற​வாளி​கள் என விசா​ரணை நீதி​மன்​றம் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிப​தி​கள் அனில் கிலோர் மற்​றும் ஷ்யாம் சந்​தக் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்து வந்​தது. விசாரணை முடிந்த நிலை​யில் நேற்று தீர்ப்பு வழங்​கப்​பட்​டது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: மும்பை தொடர் குண்​டு​வெடிப்பு வழக்​கில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள் மீதான குற்​றச்​சாட்​டு​களை ஆதா​ரத்​துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி​விட்​டது. இவர்​கள் இந்த குற்​றத்​தில் ஈடு​பட்​டார்​கள் என சந்​தேகத்​தின் பேரில் கூறுவதை ஏற்க முடி​யாது.

மேலும் விசா​ரணை​யின்​போது மீட்​கப்​பட்ட வெடிபொருட்​கள், ஆயுதங்​கள் மற்​றும் வரைபடங்​கள் ஆகிய​வற்​றுக்கு குண்​டு​வெடிப்பு சம்​பவத்​துடன் தொடர்பு இருப்​பது உறுதி செய்​யப்​பட​வில்​லை. இந்த தாக்​குதலில் என்ன வகை​யான குண்​டு​கள் பயன்​படுத்​தப்​பட்டன என்​ப​தைக் கூட அரசுத் தரப்​பால் நிரூபிக்க முடிய​ வில்லை.

எனவே, இந்த வழக்​கில் தொடர்​புடைய 12 பேர் குற்​ற​வாளி​கள் என சிறப்பு நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பும் அவர்களுக்கான தண்​டனை​யும் ரத்து செய்​யப்​படு​கிறது. வேறு எந்த வழக்​கும் நிலு​வை​யில் இல்​லா​விட்​டால் அனை​வரை​யும் சிறையி​லிருந்து விடு​தலை செய்ய வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x