Published : 22 Jul 2025 07:13 AM
Last Updated : 22 Jul 2025 07:13 AM

பிஹாரில் தேர்தல் ஆணையத்தால் கண்டுபிடிக்க முடியாத 11,000 வாக்காளர்கள் சட்டவிரோத குடியேறிகள்?

பாட்னா: பிஹாரில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் 32 லட்சம் வாக்காளர்களை மட்டுமே சரிபார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் 11,000 பேரை கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்பதுடன் அவர்கள் அங்கு வசித்ததாக அண்டை வீட்டாராலும் உறுதி செய்யப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில், அந்த முகவரிகளில் எந்த வீடும் அல்லது குடியிருப்பும் இல்லை. அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக (வங்கதேசத்தினர் அல்லது ரோஹிங்கியாக்கள்) அண்டை மாநிலங்களில் வசித்து வந்திருக்கலாம், எப்படியோ பிஹாரில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கலாம்.

வாக்​காளர் பட்​டியலில் சுருக்​கத் திருத்​தப் பணி மேற்​கொள்​ளும்​போது தேவை​யான சோதனை​கள் இல்​லாத​தாலோ அல்​லது முறை​கே​டான வழி​யிலோ அவர்​களின் பெயர் நீக்​கப்​ப​டா​மல் இருந்​திருக்​கலாம். இது தேர்​தலின்​போது கள்ள வாக்​கு​கள் பதி​வாகும் அபா​யத்தை ஏற்​படுத்​துகிறது” என்​றார்.

பிஹாரில் 3 முறை கட்​டாய பரிசோதனைக்கு பிறகும் 41.6 லட்​சம் வாக்​காளர்​கள் (மொத்த வாக்​காளர்​களில் 5.3% பேர்) அவர்​களின் முகவரி​களில் காணப்​பட​வில்​லை. இவர்​களில் 14.3 லட்​சம் (1.8%) பேர் இறந்​திருக்​கலாம் எனவும் 19.7 லட்​சம் பேர் அல்​லது 2.5% பேர் நிரந்​தர​மாக இடம் மாறி​யிருக்​கலாம் எனவும் நம்​பப்​படு​கிறது. 7.5 லட்​சம் அல்​லது 0.9% பேர் ஒன்​றுக்​கும் மேற்​பட்ட இடங்​களை சேர்ந்​தவர்​கள் என கண்​டறியப்​பட்ட நிலை​யில் 11,000 பேரை முற்​றி​லும் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை.

இது தொடர்​பாக அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “இறந்த வாக்​காளர்​களை பட்​டியலில் இருந்து நீக்​காமல் இருப்​பதும் கள்ள வாக்​கு​களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்​து​விடும். முகவரி​யில் காணப்​ப​டாத வாக்​காளர்​கள் எண்​ணிக்​கை, சில தொகு​தி​களில் வேட்​பாளர்​களின் வெற்​றிக்​கான வாக்கு வித்​தி​யாசத்தை விட அதி​க​மாக இருக்​கலாம். எனவே இது​போன்ற முரண்​பாடு​களை கண்​டறிந்து களைவதற்கு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி அவசி​ய​மாகிறது’’ என்​றார்.

பிஹாரின் 7.9 கோடி வாக்​காளர்​களில் கிட்​டத்​தட்ட 96% பேர் தங்​கள் சேர்க்கை படிவங்​களை சமர்ப்​பித்​துள்​ளனர். இது​வரை பெறப்​பட்ட 90.6% வாக்காளர் படிவங்​களில் கிட்​டத்​தட்​ட 88.2% டிஜிட்​டல்​ மயமாக்​கப்​பட்​டுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x