Published : 22 Jul 2025 07:23 AM
Last Updated : 22 Jul 2025 07:23 AM

லவ் ஜிகாத் குற்றவாளி மீண்டும் இந்துவாக விருப்பம்

ஆக்ரா: ஆக்​ராவைச் சேர்ந்த 33 வயது மற்​றும் 18 வயதுடைய இரண்டு சகோதரி​கள் காணா​மல் போன வழக்​கில் தொடங்​கப்​பட்ட விசா​ரணை​யில் அவர்​கள் லவ் ஜிகாத் கும்​பலால் கட்​டாய மதமாற்​றம் செய்​யப்​பட்​டது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, ராஜஸ்​தானைச் சேர்ந்த முகமது அலி உள்​ளிட்ட 10 பேர் உத்தர பிரதேச போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டனர். மத மாற்​றத்​துக்​காக அவர்​கள் அமெரிக்கா மற்​றும் கனடா​விலிருந்து நிதி திரட்​டியது தெரிய​வந்​தது.

முகமது அலி மதம் மாறு​வதற்கு முன்​பாக இந்து மதத்தை சேர்ந்​தவர். அவரது பெயர் பியூஷ் பன்​வர். தற்​போது ஆக்ரா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள அவர் மனம் திருந்தி குடும்​பத்​தினருடன் வசிக்க ஆசைப்​படு​வ​தாக போலீ​ஸாரிடம் தெரி​வித்​துள்​ளார். மேலும், இஸ்​லாத்தை விட்டு வெளி​யேறி மீண்​டும் இந்து மதத்​துக்கு மாற விரும்​புவ​தாக​ தெரி​வித்​துள்​ளார்.

ராஜஸ்​தானைச் சேர்ந்த ஷனா என்ற பெண்ணை காதலித்து திரு​மணம் செய்ய இஸ்​லாத்தை தழுவி தனது பெயரை முகமது அலி என மாற்​றிக்​கொண்​டார். ஆனால், பியூஷின் காதலை ஷனா நிராகரித்து விட்​டார்.

பின்னர், தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பில் சேர்ந்தார். அங்கு முகமது கவுஸுடன் சேர்ந்து சிறுமிகளை கட்​டாய மதமாற்​றம் செய்​த​தாக முகமது அலி உள்​ளிட்​டோர்​ மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x