Published : 21 Jul 2025 07:25 AM
Last Updated : 21 Jul 2025 07:25 AM

பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ அன்மோல் ராஜினாமா

சண்​டிகர்: பஞ்​சாப் அமைச்​சர​வையி​லிருந்து கடந்த ஆண்டு நீக்​கப்​பட்ட ஆம் ஆத்மி எம்​எல்ஏ அன்​மோல் ககன் மான் தனது பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். கடந்த 2022-ல் நடை​பெற்ற பஞ்​சாப் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கரார் தொகு​தி​யில் ஆம் ஆத்மி சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர் அன்மோல் ககன் மான்.

பாடகி​யான இவர், பகவந்த் மான் தலை​மையி​லான அரசில் சுற்​றுலா, முதலீட்டு மேம்​பாடு துறை அமைச்​ச​ராக பதவி வகித்​தார். எனினும் கடந்த ஆண்டு அமைச்​சர​வையி​லிருந்து அன்​மோல் நீக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில் அரசி​யலில் இருந்தே வில​கு​வ​தாக அவர் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் அன்​மோல் வெளி​யிட்ட பதி​வில், “என் இதயம் கனமாக இருக்​கிறது, ஆனால் நான் அரசி​யலை விட்டு விலக முடிவு செய்​துள்​ளேன். எம்​எல்ஏ பதவியி​லிருந்து வில​கும் என்​னுடைய முடிவை சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஏற்​றுக் கொள்ள வேண்​டும். கட்​சிக்கு வாழ்த்​துகள். பஞ்சாப் அரசு மக்​களின் எதிர்​பார்ப்​பு​களை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார். ஆனால், அவரது விலகலை ஆம் ஆத்மி கட்சி ஏற்க மறுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x