Last Updated : 20 Jul, 2025 07:45 AM

 

Published : 20 Jul 2025 07:45 AM
Last Updated : 20 Jul 2025 07:45 AM

மதமாற்றத்தில் சாங்குர் பாபா கும்பலுக்கு தமிழகத்துடன் தொடர்பு: சென்னை வருகிறது உத்தர பிரதேச மாநில ஏடிஎஸ் படை

புதுடெல்லி: சுமார் 1,500 பேருக்கும் அதிகமான பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றியக் குற்றவாளி சாங்குர் பாபா (எ) ஜலாலுதீன். இவர் உபியின் பல்ராம்பூரில் இருந்தபடி அரபு நாடுகளின் நிதி உதவியால் வட மாநிலப் பெண்களை மதமாற்றம் செய்து வந்துள்ளார்.

கடந்த ஜூலை 4-ல் சாங்குர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்களான நீத்து நவீன் ரொஹரா என்கிற நஸ்ரீன், அவரது கணவர் நவீன் ரொஹரா ஆகியோர் கைதாயினர். நீதிமன்றக் காவலில் உள்ள இவர்களிடம் உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புபடை (ஏடிஎஸ்) நடத்தும் விசாரணையில் பல அதிர்ச்சியானத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில், இந்த கும்பலுக்கு தமிழ்நாட்டின் சிலருடன் தொடர்பு இருப்பது தெரிந்துள்ளது.

சாங்குர் பாபா​விற்கு உபி, மகராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களின் வங்​கி​களில் 22 கணக்​கு​கள் உள்​ளன. இவற்​றில் ரூ.60 கோடி ரொக்​கம் இருந்​துள்​ளது. இத்​துடன் சுமார் நூறு கோடிக்​கும் அதி​க​மான சொத்​தும் வைத்​துள்​ளார் பாபா. இதனால், சாங்குர் பாபா​வின் வழக்கை மத்​திய அமலாக்​கத்​துறை மற்​றும் தேசி​யப் புல​னாய்வு நிறு​வன​மும்​ (என்​ஐஏ) விசா​ரிக்​கிறது. அதில், இவர்​களுக்கு சுவிஸ் நாட்​டின் வங்​கி​யிலும் கணக்கு இருப்​பது தெரிந்​துள்​ளது.

உபி​யின் லக்​னோ, பல்​ராம்​பூர், மும்பை ஆகிய 22 நகரங்​களில் சாங்குர் பாபா​விற்கு சொந்​த​மான இடங்​களில் அமலாக்​கத்​துறை கடந்த வாரம் சோதனை நடத்​தி​யது. இதில் கிடைத்த ஒரு ஆவணத்​தில் பாபா கும்​பலுக்கு தமிழகத்​துட​னும் தொடர்பு இருப்​பதும் தெரிந்​துள்​ளது. உபி​யின் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள ஒரு சொத்து தமிழ்​நாட்​டைச் சேர்ந்த ஒரு பெண் பெயரில் ரூ.40 லட்​சத்​திற்கு விற்​பனை​யாகி உள்​ளது. பிறகு ஒரு இடைவெளிக்கு பின் இந்​த சொத்து குற்​ற​வாளி​களில் ஒரு​வ​ரான நஸ் ரீன் பெயருக்கு தமிழ்​நாட்​டைச் சேர்ந்த பெண் நன்​கொடை​ ஆக வழங்கி உள்​ளார்.

இந்த ஆவணத்​தின் மூலம், பாபா கும்​பலுக்கு தமிழ்​நாட்​டிலும் பலருடன் சட்​ட​விரோத மதமாற்ற வழக்​கில் தொடர்பு இருக்​கும் என சந்​தேகிக்​கப்​படு​கிறது. இதை விசா​ரிக்க உபி​யின் ஏடிஎஸ் படை, மத்​திய அமலாக்​கத்​துறை மற்​றும் என்ஐஏ அதி​காரி​கள் சென்னை வர உள்​ளனர். தமிழ்​நாட்​டில் சிலர் மூல​மாக சாங்குர் பாபா​விற்கு ஹவாலா வழி​யாக​வும் பணம் வந்​திருப்​ப​தாக​வும் விசா​ரிக்க உள்​ளனர்.

இந்த வழக்​கில் உபி​யில் கைதான நால்​வருடன் மேலும் ஆறு பேர் தேடப்​பட்டு வந்​தனர். இவர்​களில் சாங்குர் பாபா​வின் சகோ​தரி மக​னான சப்​ராஜ் மற்​றும் புத்து என்​றழைக்​கப்​படும் இம்​ரான், அவரது நண்​ப​ரான சஹாபுத்​தீன் ஆகிய இரு​வரை நேற்று ஏடிஎஸ் கைது செய்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x