Published : 18 Jul 2025 07:49 AM
Last Updated : 18 Jul 2025 07:49 AM

இந்தியாவுக்கு துரோகம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மத்திய அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை

ஜெய்ப்பூர்: இந்​தி​யா​வுக்கு துரோகம் செய்​தால் அதன் விளைவு​களை எதிர்​கொள்ள நேரிடும் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறி​னார். சர்​வ​தேச கூட்​டுறவு ஆண்டு 2025-ஐ முன்​னிட்டு ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் நேற்று நடை​பெற்ற விழா​வில் மத்​திய உள்​துறை மற்​றும் கூட்​டுறவுத் துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை மூலம் இந்​திய மக்​களுக்​கும், அதன் எல்​லைக்​கும், அதன் பாது​காப்பு படைகளுக்​கும் துரோகம் செய்​யக் கூடாது என்ற வலு​வான செய்தி உலகுக்கு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அவ்​வாறு துரோகம் செய்​பவர்​கள் அதன் விளைவு​களை எதிர்​கொள்ள வேண்​டி​யிருக்​கும்.

நாட்டை பாது​காப்​ப​தில் பிரதமர் நரேந்​திர மோடி மிகப்​பெரிய பணியை செய்​துள்​ளார். காங்​கிரஸ் ஆட்​சி​யின்​போது, கிட்​டத்​தட்ட ஒவ்​வொரு நாளும் தீவிர​வாத தாக்​குதல்​களால் நாடு பாதிக்​கப்​பட்​டது.

அடுத்த 100 ஆண்​டு​கள் கூட்​டுறவுக்​கான ஆண்​டு​களாக இருக்​கும். கூட்​டுறவுச் சங்​கங்​களை ஒவ்​வொரு கிராமத்​துக்​கும் ஒவ்​வொரு ஏழைக்​கும், ஒவ்​வொரு விவ​சா​யிக்​கும் கொண்டு செல்​லும் நோக்​கத்​தில் மத்​தி​யில் கூட்​டுறவு அமைச்​சகம் தனி அமைச்​சக​மாக நிறு​வப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு மத்திய அமைச்சர் அமித்​ ஷா பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x