Published : 18 Jul 2025 07:07 AM
Last Updated : 18 Jul 2025 07:07 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில் கார், பைக் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

நாசிக்: ம​கா​ராஷ்டி​ரா​வில் கார், பைக் மோதிய விபத்​தில் 7 பேர் உயி​ரிழந்​தனர். படு​காயமடைந்த 2 பேர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்​டம், டிண்​டோரி நகருக்கு அருகே புதன்​கிழமை நள்​ளிரவு சாலை​யில் சென்று கொண்​டிருந்த காரும் பைக்​கும் நேருக்கு நேர் மோதிக் கொண்​டன. இதையடுத்து இரு வாக​னங்​களும் அரு​கில் இருந்த கால்​வா​யில் விழுந்​தன.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்வப இடத்​துக்கு உடனடி​யாக விரைந்து சென்ற போலீ​ஸாரும் மீட்​புப் படை​யினரும் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது, 7 பேரை சடல​மாக மீட்​கப்​பட்​டனர். மேலும் படு​காயமடைந்த 2 பேரை மீட்டு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இந்த விபத்து குறித்து போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x