Published : 18 Jul 2025 06:18 AM
Last Updated : 18 Jul 2025 06:18 AM

குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை: பஞ்சாப் மாநில அரசு உத்தரவு

சண்டிகர்: குடும்ப உறவு​களை சரி​பார்க்க குழந்​தை​யுடன் பிச்​சையெடுக்​கும் நபர்​களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த பஞ்​சாப் மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து அதி​காரி​கள் தெரி​வித்​த​தாவது: குழந்தை கடத்​தல் மற்​றும் பிச்சை எடுப்​ப​தற்​காக அவர்​கள் சுரண்​டப்​படு​வதை தடுக்​கும் நோக்​கில் நடவடிக்கை முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளது. அதன்​படி தெருக்​களில் பெரிய​வர்​களு​டன் பிச்சை எடுப்​ப​தாக கண்​டறியப்​பட்ட குழந்​தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தி அவர்​களின் உறவை சரி​பார்க்க அனைத்து துணை ஆணை​யர்​களுக்​கும் அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதற்​கான உத்​தரவை சமூக பாது​காப்​பு, பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்டு அமைச்​சர் பல்​ஜித் கவுர் பிறப்​பித்​துஉள்​ளார்.

டிஎன்ஏ முடிவு​கள் கிடைக்​கும் வரை குழந்​தைகளை நலக் குழுக்​களின் மேற்​பார்​வை​யில் வைத்​திருக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. டிஎன்ஏ சோதனை​யில் குழந்​தைக்​கும் அந்த குழந்​தையை வைத்​திருந்த நபருக்​கும் எந்த தொடர்​பும் இல்லை என்​பது உறு​தி​யா​னால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x