Last Updated : 17 Jul, 2025 08:37 AM

 

Published : 17 Jul 2025 08:37 AM
Last Updated : 17 Jul 2025 08:37 AM

பிஹாரில் போதை தடுப்புக்கு புதுவிதமான நடவடிக்கை: தடுப்புகள் அமைத்து காவல் காக்கும் கிராமத்தினர்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: பிஹாரின் பாகல்​பூர் மாவட்​டத்​தில் உள்​ளது குல்​குலியா சைத்​பூர் கிராமம். இங்​குள்ள இளைஞர்​கள் போதை பொருள் பயன்​படுத்​து​வதைத் தடுக்க அதன் கிராமப் பஞ்​சா​யத்​தில் முடிவு எடுக்​கப்​பட்​டது. இந்த நடவடிக்கை துவங்​கும் முன்பு வரை வெளி ஆட்​கள் பலரும் இரவு நேரங்​களில் சந்​தேகத்​திற்கு இடமளிக்​கும் வகை​யில் வந்து சென்​றபடி இருந்​துள்​ளனர். இவர்​களைப் பற்றி விசா​ரித்த கிராமத்​தினர் அவர்​கள் போதை பொருள்​கள் விற்​பனை செய்​பவர்​கள் எனத் தெரிய​வந்​துள்​ளது.

எனவே, கிராமத்​தில் நுழைவதற்​காக இருக்​கும் ஒரே ஒரு சாலை​யில் மூங்​கில் தடுப்பை போட்டு மூடி வைத்​துள்​ளனர். இத்​துடன் அங்கு இரவு பகல் என 24 மணி நேர​மும் 2-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் காவல் பணி​யில் உள்​ளனர். கிராமத்தை கடந்து செல்​லும் வாக​னங்​கள் குறித்து விசா​ரித்து அவர்​களின் விவரங்​கள் ஒரு பதிவேட்​டிலும் எழுதி வைக்​கப்​படு​கிறது.

இதுகுறித்து குல்​குலியா சைத்​பூர் கிராம​வாசி​யான சத்​யேந்​தர் மண்​டல் கூறும்​போது, "பிர​வுண் சுகர் உள்​ளிட்ட பல்​வேறு போதைப் பொருள்​கள் பயன்​பாடு குறித்த அச்​சம் எழுந்​துள்​ளது. குறிப்​பாக, இதற்​காக 15 முதல் 28 வயது கொண்​ட​வர்​கள் குறி வைக்​கப்​படு​கிறார்​கள்.

வெளியி​லிருந்து இருசக்கர வாக​னங்​களில் வரும் அடை​யாளம் தெரி​யாத வெளிநபர்​கள் இவர்​களிடையே போதையை பரப்​பும் செயலில் ஈடு​பட்​டுள்​ளனர். இது​போன்ற பிரச்​சினை​களுக்கு காவல் ​நிலை​யத்தை நம்பி பலனில்​லை. இதனால், கிராமத்​தினரே முன்​வந்து இப்​பணி​யில் இறங்கி விட்​டோம்" என்​றார்.

சுமார் 8,000 மக்​கள்​ தொகை கொண்ட குல்​குலியா சைத்​பூர் கிராமத்​தினருக்​காக 3 கி.மீ. தொலை​வில் காவல்​ நிலை​யம் உள்​ளது. இந்த கிராமத்​தி​லும் குறிப்​பிட்ட ஒரு சிலருக்கு போதைப் பொருள் உட்​கொள்​ளும் பழக்​கம் பரவி உள்​ளது. இதற்கு நடுத்தர வயது கொண்ட ஐந்து பேர் சமீப மாதங்​களில் உயிரிழந்துள்ளனர்.

வேறு வழி​யின்றி குல்​குலியா சைத்​பூர்​வாசிகள் இந்த வித்​தி​யாச​மான முயற்​சியை செய்து வரு​கின்​றனர். இதற்கு நல்ல பலன் கிடைப்​ப​தாக​வும்​ ​பாகல்​பூர்​ ​மாவட்​டத்​தின்​ இதர சில கி​ராமத்​தினரும்​ இது​போல்​ ​காவல்​ பணி செய்​ய யோசனை செய்​து வரு​வ​தாக​வும்​ கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x