Published : 17 Jul 2025 07:27 AM
Last Updated : 17 Jul 2025 07:27 AM

நாடாளுமன்ற உணவகத்தில் ராகி இட்லி, வறுத்த மீன்

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள நாடாளு​மன்ற வளாகத்​தில் உறுப்​பினர்​கள், ஊழியர்​கள் மற்​றும் பார்​வை​யாளர்​களுக்​காக உணவகம் செயல்​பட்டு வரு​கிறது. அதில் ராகி சிறு​தானிய இட்​லி, சோள உப்​பு​மா, பாசிப்​பருப்பு தோசை மற்​றும் காய்​கறிகளு​டன் கூடிய வறுத்த மீன் உள்​ளிட்ட ஊட்​டச்​சத்​தான உணவு வகைகளை விநி​யோகிக்க நாடாளு​மன்ற உணவகம் திட்​ட​மிட்​டுள்​ளது.

மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லா​வின் வேண்​டு​கோளின்​படி, சுவையை தியாகம் செய்​யாமல் உடல் ஆரோக்​கி​யத்தை காக்​கும் வகை​யில் புதிய உணவு வகைகள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. சுவை​யான கறிகள் மற்​றும் விரி​வான 'தாலி'களு​டன் சிறு​தானி​யங்​களை அடிப்​படை​யாகக் கொண்ட உணவு​கள், நார்ச்​சத்து நிறைந்த சாலடு​கள் மற்​றும் புரதம் நிறைந்த சூப்​களும் வழங்​கப்​படு​கின்​றன.

ஒவ்​வொரு உணவும் குறை​வான கார்​போஹைட்​ரேட், சோடி​யம் மற்​றும் கலோரி​களைக் கொண்​ட​தாக​வும் அத்​தி​யா​வசிய ஊட்​டச்​சத்து நிறைந்​த​தாக​வும் இருக்​கும் வகை​யில் கவன​மாக திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. பிரதமர் மோடியின் கோரிக் கையை ஏற்று கடந்த 2023-ம் ஆண்டை சர்​வ​தேச சிறு​தானிய ஆண்​டாக ஐ.நா. அறி​வித்​தது. இதையடுத்து சிறு​தானி​யங்​களுக்​கான முக்​கி​யத்​து​வம் அதி​கரித்து வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x