Published : 17 Jul 2025 07:09 AM
Last Updated : 17 Jul 2025 07:09 AM

உள்நாட்டு ட்ரோன் முக்கியத்துவத்தை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியது: முப்படை தளபதி தகவல்

புதுடெல்லி: ‘இறக்​குமதி செய்​யப்​படும் ட்ரோன்​களை உள்​நாட்​டில் தயாரித்​தல்’ என்ற ஒரு நாள் பயிலரங்கு டெல்​லி​யில் உள்ள மானெக்ஷா மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. பாது​காப்​புத்​துறை ஏற்​பாடு செய்த பயிலரங்​கில் ராணுவ உயர் அதி​காரி​கள், பாதுகாப்​புத்​துறை விஞ்​ஞானிகள், நிபுணர்​கள், ராணுவத் தளவாட நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் முப்​படை தளபதி ஜெனரல் அனில் சவு​கான் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது பாகிஸ்​தான் ட்ரோன்​களை​யும், அதில் எடுத்​துச் செல்​லப்​படும் குண்​டு​களை​யும் பயன்​படுத்​தி​யது. ஆனால், பெரும்​பாலானவற்றை நடு​வானில் அழித்​து​விட்​டோம்.

நமது தேவை​களுக்கு ஏற்ப உள்​நாட்​டில் தயாரிக்​கப்​படும் ட்ரோன்​கள், வானில் இடைமறிக்​கும் ட்ரோன்​கள் ஆகியவை மிக முக்கியம் என்​பதை ஆபரேஷன் சிந்​தூர் உணர்த்​தி​யது. பாது​காப்பு துறை​யில் புதிய தொழில்​நுட்​பங்​கள் முக்​கிய​மானது.. இவற்றுக்காக நாம் வெளி​நாடு​களைச் சார்ந்​திருக்க முடி​யாது. இவ்​வாறு அனில் சவு​கான் பேசி​னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x