Published : 17 Jul 2025 06:55 AM
Last Updated : 17 Jul 2025 06:55 AM

அமெரிக்காவின் 3 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு அடுத்த வாரம் விநியோகம்

புதுடெல்லி: அமெரிக்கா அ​திநவீன அப்​பாச்சி ரக தாக்​குதல் ஹெலி​காப்​டர்​களை அடுத்த வாரம் இந்​தி​யா​வுக்கு விநி​யோகம் செய்ய உள்​ளது. கடந்த 2015-ம் ஆண்டு 22 அதிநவீன அப்​பாச்சி ரக தாக்​குதல் ஹெலி​காப்​டர்​களை வாங்க அமெரிக்கா மற்​றும் போயிங் நிறு​வனத்​துடன் இந்​திய விமானப் படை ஒப்​பந்​தம் மேற்​கொண்​டது.

அதன்​படி கடந்த 2020-ம் ஆண்​டுக்​குள் 22 அப்​பாச்சி ரக ஹெலி​காப்​டர்​களை​யும் இந்​தி​யா​வுக்கு அமெரிக்கா விநி​யோகம் செய்​தது. அதன்​பின்​னர் அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் முதல் முறை​யாக பதவி​யேற்ற பின்​னர் அதே ஆண்​டின் பிற்​பகு​தி​யில் மேலும் 6 அப்​பாச்சி ரக ஹெலி​காப்​டர்​கள் வாங்க 600 மில்​லியன் டாலர் மதிப்​பில் அமெரிக்கா​வுடன் இந்​திய விமானப் படை ஒப்​பந்​தம் செய்​தது.

அந்த ஒப்​பந்​தத்​தின் படி கடந்த 2024-ம் ஆண்டு மே - ஜூன் மாதங்​களில் அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​கள் இந்​தி​யா​வுக்கு விநி​யோகம் செய்​திருக்க வேண்​டும். ஆனால், சர்​வ​தேச அரசி​யல், போர் போன்ற காரணங்​களால் இந்​தி​யா​வுக்கு அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​கள் வழங்​கு​வ​தில் கால தாமதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், அடுத்த வாரம் 3 அப்​பாச்சி ரக ஹெலி​காப்​டர்​களை இந்​திய விமான படை​யிடம் அமெரிக்கா ஒப்​படைக்​கும் என்று தகவல் வெளி​யாகி உள்​ளது. அநேக​மாக வரும் 21-ம் தேதி 3 ஹெலி​காப்​டர்​களும் இந்​தி​யா​விடம் வழங்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அந்த ஹெலி​காப்​டர்​களை பாகிஸ்​தான் எல்​லைப் பகு​தி​களில் நிலைநிறுத்த விமானப் படை முடி​வெடுத்​துள்​ளது. இதன் மூலம் பாகிஸ்​தான் எல்​லை​யில் விமானப் படை​யின் பலம் மேலும் வலுப்​பெறும்.

அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​கள் எந்த காலநிலை​யிலும் இயங்​கக் கூடியது. துல்​லிய​மாக தாக்​குதல் நடத்​தும் திறன் கொண்​டது. பகல் இரவு என எந்த நேரத்​தி​லும் தாக்​குதல் நடத்​து​வதற்கு ஏது​வானது. சிறந்த ரேடார், சென்​சார், தகவல் தொடர்பு கரு​வி, தானி​யங்கி போன்ற பல்​வேறு அம்​சங்​கள்​ இந்​த அப்​பாச்​சி ஹெலி​காப்​டரில்​ உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x