Published : 16 Jul 2025 07:00 AM
Last Updated : 16 Jul 2025 07:00 AM

மத்திய அரசின் அதிதீவிர முயற்சியால் நிமிஷாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு

புதுடெல்லி: மத்​திய அரசின் அதிதீ​விர முயற்​சி​யால் கேரள செவிலியர் நிமிஷா பிரி​யா​வின் மரண தண்​டனையை ஏமன் அரசு தள்ளி வைத்​துள்​ளது. கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனா​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராக பணி​யில் சேர்ந்​தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜி​னாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து அங்கு புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார்.

கருத்து வேறு​பாடு காரண​மாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்​திக்​கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்​தி​னார். இதில் அவர் உயி​ரிழந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த சனா நகர நீதி​மன்​றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்​டனை விதித்​தது. இதை ஏமன் உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​தது. இதையடுத்​து, ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படும் என்று ஏமன் அரசு அறி​வித்​திருந்​தது.

சட்​டரீ​தி​யான முயற்​சிகள் தோல்வி அடைந்த நிலை​யில், மெஹ்தி குடும்​பத்​தினருக்கு ரூ.8.6 கோடி குரு​திப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்​பத்​தினர் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கின்​றனர். இதற்கு தேவை​யான உதவி​களை மத்​திய அரசு வழங்கி வரு​கிறது. இதனிடையே நிமிஷா​வின் மரண தண்​டனையை தள்​ளிவைக்​கு​மாறு மத்​திய அரசு சார்​பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டது. இந்த விவ​காரத்​தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூல​மாக​வும் மத்​திய அரசு அழுத்​தம் கொடுத்​தது.

இநத் சூழலில் நிமிஷா பிரி​யா​வின் மரண தண்​டனை தள்ளி வைக்​கப்​படு​வ​தாக ஏமன் அரசு நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது. கேரளாவை சேர்ந்த முஸ்​லிம் மத தலை​வர் கிராண்ட் முப்தி ஏ.பி. அபுபக்​கர் முஸ்​லி​யார், ஏமனை சேர்ந்த முஸ்​லிம் மதத் தலை​வர்​களு​டன் நேற்று முன்​தினம் தொலைபேசி​யில் பேசி​னார்.

இதைத் தொடர்ந்து மெஹ்​தி​யின் சொந்த ஊரான தமரில் நேற்று சமரச பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. ஏமன் உச்ச நீதி​மன்ற நீதிபதி ஒரு​வரும், மெஹ்​தி​யின் சகோ​தரரும் பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்​றுள்​ளனர். அவர்​களு​டன் நிமிஷா பிரி​யா​வின் தாய் பிரேமா குமாரி, சா​முவேல் ஜெரோம் உள்​ளிட்​டோர் பேச்​சு​வார்த்​தை நடத்​தி வருகின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x