Published : 14 Jul 2025 08:26 AM
Last Updated : 14 Jul 2025 08:26 AM

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எம்.பி.க்களுடன் சோனியா நாளை ஆலோசனை 

புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடை​பெற உள்ளது. இந்த கூட்​டத்​தொடரில் எவ்​வாறு செயல்​படு​வது, எழுப்ப வேண்​டிய முக்​கிய பிரச்​சினை​கள் குறித்து விவா​திக்க காங்கிரஸ் எம்​.பி.க்​களு​டன் சோனியா காந்தி நாளை ஆலோசனை நடத்த உள்​ளார்.

ஜம்மு - காஷ்மீரில் பஹல்​காம் சுற்றுலா தளத்தில் தீவிர​வாதிகள் நடத்திய தாக்​குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்​திய அரசு “ஆபரேஷன் சிந்​தூர்” நடவடிக்​கையை மேற்​கொண்டு பாகிஸ்​தானில் உள்ள முக்​கிய தீவிர​வாத முகாம்​களை அழித்​தது.

அதன் பிறகு முதல் முறை​யாக நாடாளு​மன்​றம் கூடு​வ​தால் அது குறித்​தும், இந்​தி​யா-​பாகிஸ்​தான் போர் நிறுத்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் தலை​யீடு குறித்​தும் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் விவாதத்தை கிளப்​பும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மேலும், பிஹார் வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​ளும் தேர்​தல் ஆணை​யத்​தின் நடவடிக்கை குறித்து எதிர்க்​கட்​சிகள் இந்த கூட்​டத்​தொடரில் பிரச்​சினையை எழுப்​பும் என்று தெரி​கிறது. முன்​னர் திட்​ட​மிட்​டதை விட ஒரு வாரம் அதிகமாக மழைக்​கால கூட்​டத்​தொடர் நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் அணுசக்​தித் துறை​யில் தனியார்துறை நுழைவதை எளி​தாக்​கு​வது உட்பட பல முக்​கிய மசோ​தாக்​களை மத்​திய அரசு தாக்​கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்​படு​கிறது.

இந்த நிலை​யில், மழைக்​கால கூட்​டத்​தொடரில் எவ்​வாறு செயல்பட வேண்​டும் என்ற உத்​தியை இறுதி செய்​வதற்​காக காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் அடங்​கிய ஆலோசனை கூட்​டம் காங்​கிரஸ் நாடாளு​மன்​றக் கட்சி தலை​வர் சோனியா காந்தி தலை​மை​யில் நாளை நடை​பெறவுள்​ளது.

டெல்லி ஜன்​பத் சாலை​யில் உள்ள சோனி​யா​வின் இல்​லத்​தில் நடை​பெறவுள்ள இந்த கூட்​டத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கே, ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் கலந்து கொள்​கின்​றனர். இதனிடையே, மழைக்​கால கூட்​டத்​தொடர் தொடர்​பான அனைத்​துக் கட்சி கூட்​டம் ஜூலை 19-ம் தேதி நடை​பெறும்​ என்​று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x