Published : 14 Jul 2025 07:57 AM
Last Updated : 14 Jul 2025 07:57 AM

ஒடிசா: பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தீக்குளிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்​வரில் உள்ள கல்​லூரி ஒன்​றில், கல்​வி​யியல் துறை் தலை​வ​ராக பணி​யாற்​றிய​வர் சமிரா குமார் சாகு. இவர் மாணவி ஒரு​வருக்கு பாலி​யல் தொந்​தரவு அளித்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இது குறித்து கல்​லூரி​யின் புகார் குழு​வில் மாணவி புகார் அளித்​தார். இது குறித்து உடனடி நடவடிக்கை எது​வும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் நேற்று முன்​தினம் தீக்​குளிக்க முயன்​றார்.

உடனே அரு​கில் இருந்​தவர்​கள் மாண​வியை காப்​பாற்றி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். மாணவி புகார் குறித்து விசாரணை நடத்த உயர்​நிலை குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது என்று கல்வி அமைச்​சர் சூர்​யபன்ஷி சூரஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x