Published : 03 Jul 2025 07:43 AM
Last Updated : 03 Jul 2025 07:43 AM

பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக சிகாச்சி நிறுவனம் அறிவிப்பு

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், சங்​காரெட்டி மாவட்​டத்​தில் உள்ள சிகாச்சி ரசாயன தொழிற்​சாலை​யில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென பயங்கர வெடி​விபத்து ஏற்​பட்​டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 40 ஆக உயர்ந்​துள்​ளது. 33 பேர் காயத்​துடன் இன்​ன​மும் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். பலர் காணா​மல் போயுள்​ளனர்.

இந்​நிலை​யில், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி இறந்​தவர்​களின் குடும்​பத்​தாரை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தார். இந்நிலையில், இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்​கு​வ​தாக சிகாச்சி தொழிற்​சாலை செய​லா​ளர் விவேக் தெரி​வித்​துள்​ளார்.

இந்த விபத்து ரியாக்​டர் வெடித்​த​தால் இல்​லை. நாசவேலை கூட காரண​மாக இருக்​கலாம் என்று விவேக் கூறி​யுள்​ளார். இதையடுத்து விபத்து குறித்து தலைமை ரசாயன நிபுணர் பிர​தாப் குமார் தலை​மை​யில் ஓய்வு பெற்ற ரசாயன நிபுணர் சூர்ய நாராயணா, பூனாவை சேர்ந்த பாது​காப்பு அதி​காரி சந்​தோஷ் கோகே ஆகிய 3 பேரை தெலங்​கானா அரசு விசா​ரணைக்​காக நியமனம் செய்​துள்​ளது. மேலும் சிகாச்சி ரசாயன நிறு​வனம் 3 மாதம் மூடப்​படும்​ என்​று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x