Published : 03 Jul 2025 06:56 AM
Last Updated : 03 Jul 2025 06:56 AM
பாட்னா: பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி முதல்வர் பிரதிக்யா யோஜனா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி அல்லது பிளஸ் 2 முதல் பட்டமேற்படிப்பு வரை முடித்துள்ள 18 முதல் 28 வயது வரையிலான இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையுடன் 3 முதல் 12 மாதங்கள் வரை தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.
இந்த ஆண்டு 5 லட்சம் பேருக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ரூ.685.76 கோடி செலவிடப்படும். சீதை பிறந்த இடமாக கருதப்படும் சீதாமர்கியில் உள்ள ஜானகி கோயிலை முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றிடும் வகையில் ரூ.882.87 கோடியில் மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்படும்.
முதல்வர் பென்ஷன் திட்டத்தின் கீழ் 50 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும். பிஹாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT