Published : 02 Jul 2025 07:28 AM
Last Updated : 02 Jul 2025 07:28 AM

தாமிரம், கோபால்ட் தாது படிமங்களை ஆராய ஜாம்பியா சென்றது இந்திய குழு

புதுடெல்லி: ஜாம்​பி​யா​வில் நிலத்​துக்கு அடி​யில் இருக்​கும் தாமிரம், கோபால்ட் தாது படிமங்​களை ஆராய புவி​யிய​லா​ளர் குழுவை மத்​திய அரசு அனுப்​பி​யுள்​ளது.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: எரிசக்தி மாற்​றத்​துக்கு அவசி​ய​மான முக்​கிய கனிமங்​களை பெறு​வதற்​கான முயற்​சிகளை மத்​திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது. இந்​நிலை​யில் தாமிரம், கோபால்ட் தாது ஆய்வுக்காக இந்​தி​யா​வுக்கு ஜாம்​பியா அரசு இந்த ஆண்டு 9,000 சதுர கி.மீ. (3,475 சதுர மைல்) நிலம் ஒதுக்க ஒப்​புக்​கொண்​டது.

மின்​சார வாக​னங்​கள் மற்​றும் மொபைல் போன்​களுக்​கான பேட்​டரி​களில் ஒரு முக்​கிய அங்​க​மாக கோபால்ட் உள்​ளது. இது​போல் மின் உற்​பத்​தி, எலெக்ட்​ரானிக்ஸ் மற்​றும் கட்​டு​மானத்​தில் தாமிரம் பரவலாக பயன்​படுத்​தப்​படு​கிறது.

இந்த ஆய்​வுத் திட்​டம் 3 ஆண்​டு​கள் நீடிக்​கும். மேலும் பெரும்​பாலான பகுப்​பாய்வு இந்​தி​யா​வில் உள்ள ஆய்​வகங்​களில் மேற்​கொள்​ளப்​படும். சுரங்​கத் திறனை மதிப்​பிட்ட பிறகு ஜாம்​பியா அரசிடம் இந்​திய அரசு சுரங்க குத்​தகையை பெறும். இத்​திட்​டத்​தில் பங்​கேற்க தனி​யார் நிறு​வனங்​களுக்​கும்​ அழைப்​பு விடுக்​க ​வாய்​ப்​புள்​ளது. இவ்​​வாறு அந்​த வட்​​டாரங்​கள்​ கூறின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x