Published : 02 Jul 2025 07:34 AM
Last Updated : 02 Jul 2025 07:34 AM

மும்பை ஐஐடி-ல் சிக்கிய போலி மாணவர்

(உள்படம்) பிலால் அகமது டெலி

மும்பை: கர்​நாட​கா​வின் மங்​களூருவை சேர்ந்​தவர் பிலால் அகமது டெலி (21). பிளஸ் 2 வரை மட்​டுமே படித்​துள்ள அவர், இணையதள வடிவ​மைப்பு தொடர்​பாக ஓராண்டு டிப்​ளமோ படிப்​பை​யும் நிறைவு செய்​துள்​ளார். இதன்​பிறகு துபாய், பஹ்ரைன் உள்​ளிட்ட நாடு​களில் பணி​யாற்றி உள்​ளார்.

தற்​போது குஜ​ராத்​தின் சூரத்​தில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் பிலால் பணி​யாற்றி வரு​கிறார். அவரது மாத ஊதி​யம் ரூ.1.25 லட்​சம் ஆகும். கடந்த சில வாரங்​களுக்கு முன்பு மும்​பை​யில் உள்ள ஐஐடி கல்வி நிறு​வனத்​துக்கு பிலால் சென்​றுள்​ளார்.

அங்கு தன்னை பிஎச்டி ஆய்வு மாணவர் என்று அறி​முகம் செய்​துள்​ளார். இதுதொடர்​பான போலி ஆவணங்​களை​யும் காண்​பித்து உள்​ளார். ஐஐடி விடு​தி​யில் தங்​கி​யிருந்து செயற்கை நுண்​ணறிவு சார்ந்த வகுப்​பு​களில் பங்​கேற்​றுள்​ளார்.

இதுகுறித்து மும்பை போலீ​ஸார் கூறிய​தாவது: கடந்த மே 27-ம் தேதி மும்பை ஐஐடி வளாகத்​தில் பிலால் நுழைந்​துள்​ளார். அங்கு பணி​யாற்​றும் பேராசிரியர்​கள், ஊழியர்​களை ஏமாற்றி 14 நாட்​கள் வரை ஐஐடி வளாகத்​தில் அவர் தங்​கி​யுள்​ளார். அவர் ஏராள​மான செல்​போன்​களை பயன்​படுத்தி உள்​ளார். 21 இ-மெ​யில் முகவரி​களை உரு​வாக்கி உள்​ளார். சில சந்​தேகத்​துக்​குரிய செயலிகளை​யும் பயன்​படுத்தி உள்​ளார்.

பிலாலின் நடவடிக்​கை​யில் சந்​தேகமடைந்த பெண் ஊழியர் ஒரு​வர் ஐஐடி நிர்​வாகத்​திடம் புகார் அளித்து உள்​ளார். இதைத் தொடர்ந்து மும்பை ஐஐடி​யின், அதி​விரைவு குழு​வினர் பிலாலை பிடித்து போலீ​ஸில் ஒப்​படைத்​தனர்.

அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் கடந்த ஆண்டு சுமார் ஒரு மாதம் வரை மும்பை ஐஐடி வளாகத்​தில் தங்​கி​யிருந்​த​தாக வாக்​குமூலம் அளித்​துள்​ளார். அவரது செல்​போன்​கள் ஆய்​வுக்​காக அனுப்​பப்​பட்டு உள்​ளன. இந்த விவ​காரம் தொடர்​பாக வழக்கு பதிவு செய்து தீவிர வி​சா​ரணை நடத்தி வரு​கிறோம். இவ்​வாறு போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x