Published : 02 Jul 2025 07:00 AM
Last Updated : 02 Jul 2025 07:00 AM

பிரிக்ஸ் மாநாட்டுக்கு செல்லும் வழியில் 5 நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் பயணம்

புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டினா மற்​றும் நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை பயணம் மேற்​கொள்​கிறார். பிரேசிலில் உச்சி மாநாட்டு பிரகடனத்​தில் பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு கண்​டனம் தெரிவிக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, பிரேசில் மற்​றும் நமீபியா தலை​வர்​களு​டன் வர்த்​தகம், பாது​காப்​பு, எரிசக்​தி, தொழில்​நுட்​பம், வேளாண்மை மற்​றும் சுகா​தா​ரம் உட்பட பல துறை​களில் ஒத்​துழைப்​புடன் செயல்​படு​வது குறித்து பிரதமர் மோடி ஆலோ​சிக்​கிறார்.

பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா,சீனா, தென்​னாப்பி​ரிக்கா உள்​ளிட்ட நாடு​களை உறுப்​பினர்​களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்​பின் 17-வது உச்சி மாநாடு பிரேசில் நாட்​டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 6,7 ஆகிய தேதி​களில் நடை​பெறுகிறது. இந்த மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரகடனத்​தில் பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு கண்​டனம் தெரிவிக்​கப்​படும்.

இதுகுறித்து வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் தாமு ராவி கூறுகை​யில், ‘‘பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலில் இந்​தியா எடுத்த நடவடிக்​கையை பிரிக்ஸ் உறுப்பு நாடு​கள் புரிந்து கொண்​டுள்​ளன. இதில் முரண்​பாடு எது​வும் இல்​லை. தீவிர​வாத அச்​சுறுத்​தலை எவ்​வாறு சமாளிப்​பது என்ற புரிதல் உள்​ளது. எனவே, பிரிக்ஸ் மாநாட்டு பிரகடனத்​தில் தீவிர​வாதத்​துக்கு எதி​ரான அச்​சுறுத்​தலை சமாளிப்​பது பற்​றிய விஷ​யம் நமக்கு திருப்தி அளிக்​கும்​ வகை​யில்​ இருக்​கும்​’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x