Published : 01 Jul 2025 07:23 AM
Last Updated : 01 Jul 2025 07:23 AM

மகாராஷ்டிர தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து

தேவேந்​திர பட்​னா​விஸ்

மும்பை: ம​கா​ராஷ்டிர தொடக்​கப் பள்​ளி​களில் மும்​மொழி கொள்கை ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநிலத்​தில் மராத்தி மற்​றும் ஆங்​கில வழிக் கல்வி பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையி​லான தொடக்​க பள்​ளி​களில் கடந்த ஏப்​ரலில் மும்​மொழி கொள்கை அமல் செய்​யப்​பட்​டது.

இதன்​படி தொடக்​கப் பள்​ளி​களில் 3-வது கட்​டாய மொழி பாட​மாக இந்தி கற்​பிக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இதற்கு உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசே​னா, மகா​ராஷ்டிர நவ நிர்​மாண் சேனா, சரத் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள், அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. இதைத் தொடர்ந்து அரசாணை நிறுத்​திவைக்​கப்​பட்​டது.

பின்​னர் கடந்த 17-ம் தேதி மகா​ராஷ்டிர அரசு தரப்​பில் திருத்​தப்​பட்ட அரசாணை வெளி​யிடப்​பட்​டது. இதன்​படி விருப்​பத்​தின் அடிப்​படை​யில் இந்​தியை கற்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டது. அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கற்​பிக்​கப்​படும். எனினும் குறிப்​பிட்ட வகுப்பை சேர்ந்த 20 சதவீத மாணவர்​கள் விரும்​பி​னால் இந்​தியை தவிர்த்து வேறு பிராந்​திய மொழியை கற்​கலாம் என்று அரசாணை​யில் குறிப்​பிடப்​பட்​டது. இதற்​கும் எதிர்க்​கட்​சிகள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தன.

இந்த விவ​காரம் தொடர்​பாக முதல்​வர் பட்​னா​விஸ் நேற்று முன்​தினம் கூறிய​தாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்​மொழிக் கொள்​கையை அமல் செய்​வது தொடர்​பாக கடந்த ஏப்​ரல், ஜூனில் வெளி​யிடப்​பட்ட அரசாணை​கள் வாபஸ் பெறப்​படு​கிறது.

தொடக்​கப் பள்​ளி​யில் மும்​மொழி கொள்​கையை அமல் செய்​வது தொடர்​பாக கல்​வி​யாளர் நரேந்​திர ஜாதவ் தலை​மையி​லான குழு ஆய்வு செய்​யும். இந்த குழு அடுத்த 3 மாதங்​களில் அறிக்​கையை தாக்​கல் செய்​யும். அதன் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு தேவேந்​திர பட்​னா​விஸ்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x