Published : 09 May 2025 08:02 AM
Last Updated : 09 May 2025 08:02 AM
கர்நாடக இந்து அறநிலைய மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்காக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடத்துமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று அனைத்து இந்து கோயில்களிலும் ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு கூடுதல் பலமும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஹனுமன் கோயிலில் நடைபெற்ற பூஜையில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி பங்கேற்று, பிரார்த்தனை செய்தார்.
இந்நிலையில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகையில், ‘‘மே 9-ம் தேதி கர்நாடகாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்தனை செய்ய உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் உள்ள ஜும்மா மசூதியில் நடைபெறும் தொழுகையில் நானும் பங்கேற் கிறேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT