Published : 09 May 2025 08:15 AM
Last Updated : 09 May 2025 08:15 AM

காந்தகார் விமான கடத்தல் தீவிரவாதி - மசூத் அசார் தம்பி அப்துல் ரவூப் உயிரிழப்பு

புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு டிசம்​பர் 24-ம் தேதி நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் இருந்து டெல்​லிக்கு புறப்​பட்ட இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமானத்தை ஹர்​கத் உல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 5 தீவிர​வா​தி​கள் கடத்​தினர். இந்த விமானம் ஆப்​கானிஸ்​தானின் காந்​த​காருக்கு கடத்தி செல்​லப்​பட்​டது. விமானத்​தில் 178 பயணி​கள், 2 விமானிகள், 13 ஊழியர்​கள் என 193 பேர் இருந்​தனர்.

அவர்​களை பத்​திர​மாக மீட்க மத்​திய அரசு சார்​பில் தீவிர​வா​தி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இதன்​படி இந்​திய சிறை​களில் இருந்த 3 தீவிர​வா​தி​கள் விடு​தலை செய்​யப்​பட்​டு, விமான பயணி​கள் மீட்​கப்​பட்​டனர். இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமான கடத்​தலுக்கு தீவிர​வாதி அப்​துல் ரவூப் அசார் என்​பவர் மூளை​யாக செயல்​பட்​டார்.

பாகிஸ்​தானின் பாவல்​பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத முகாமில் தீவிர​வாதி அப்​துல் ரவூப் அசார் தங்​கி​யிருந்​தார். இந்திய ராணுவம் நடத்​திய 'ஆபரேஷன் சிந்​தூர்' தாக்​குதலின்​போது அவர் உயி​ரிழந்​தார். ஜெய்ஷ் இ முகமது அமைப்​பின் தலை​வர் மசூத் அசா​ரின் தம்​பி​யான அப்​துல் ரவூப் அசார் கொல்​லப்​பட்​டிருப்​பது இந்​திய ராணுவத்​துக்கு கிடைத்த மிகப்​பெரிய வெற்றி ஆகும்.

காந்​த​கார் விமான கடத்​தலின்​போது இந்​திய சிறை​யில் இருந்து விடு​தலை செய்​யப்​பட்ட 3 பேரில் மசூத் அசா​ரும் ஒரு​வர். ‘ஆபரேஷன் சிந்​தூர்' தாக்​குதலில் அவரது குடும்​பத்தை சேர்ந்த 10 பேரும், அவரது 4 பாது​காவலர்​களும் உயி​ரிழந்து உள்​ளனர். பாவல்​பூரில் உள்ள தீவிர​வாத முகாமில் மசூத் அசார் தங்​கி​யிருந்​தார். சில நாட்​களுக்கு முன்பு அவர் அங்​கிருந்​து வெளி​யேறிய​தால்​ உயிர்​தப்​பி உள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x