Published : 02 May 2025 07:42 AM
Last Updated : 02 May 2025 07:42 AM

பிரதமர் நரேந்திர மோடி இன்று அமராவதி வருகை

அமராவதி: ஆந்​திர மாநில பிரி​வினைக்கு பிறகு ஆட்​சியை பிடித்த சந்​திர​பாபு நாயுடு அமராவ​தியை தலைநக​ராக அறி​வித்​தார். அவருக்கு அடுத்து ஆட்​சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி 3 தலைநகரங்​கள் அமைக்​கப்​படும் என அறி​வித்​தார். இந்​நிலை​யில் 2024-ல் மீண்​டும் முதல்​வ​ரான சந்​திர​பாபு நாயுடு அமராவதி தான் ஆந்​தி​ரா​வின் தலைநகர் என்​பதை திட்​ட​வட்​ட​மாக அறி​வித்​​தார்​.

இந்நிலையில் அமராவ​தி​ மறுகட்டுமான பணிகளுக்கான அடிக்​கல் நாட்டு விழா இன்று நடை​பெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொள்ள உள்​ளார். இதில் சுமார் 5 லட்​சம் பேர் கலந்து கொள்​ளும் வித​மாக சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. ஒரு​புறம் பாகிஸ்​தான் மீது இந்​தியா போர் தொடுக்​குமா என்ற கேள்வி எழுந்​துள்ள நிலை​யில், இரு நாட்டு எல்​லைகளி​லும் போர்ப் பதற்​றம் நில​வு​கிறது.

இன்று அமராவ​தி​யில் நடை​பெற உள்ள மாபெரும் பொதுக்​கூட்ட நிகழ்ச்​சி​யில் பிரதமர் என்ன பேசு​வார் என்​ப​தை​யும் மக்​கள் அறிய ஆவலாக உள்​ளனர். இதற்​கான ஏற்​பாடு​கள் அனைத்​தும் நிறைவு பெற்​றுள்ள நிலை​யில், இன்று மதி​யம் 3.20 மணிக்கு பிரதமர் மோடி அமராவ​திக்கு வர உள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x