Published : 26 Apr 2025 07:18 AM
Last Updated : 26 Apr 2025 07:18 AM

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் 2 பேரின் வீடுகளை தரைமட்டமாக்கிய பாதுகாப்பு படை

புதுடெல்லி: பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய 2 தீவிர​வா​தி​களின் வீடு​களை பாது​காப்​புப் படை​யினர் வெடி​வைத்து தகர்த்​தனர். காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்​தத் தாக்​குதலில் பாகிஸ்​தானின் லஷ்கர் தீவிர​வாத இயக்​கத்​தின் 4 தீவிர​வா​தி​கள் சம்​பந்​தப்​பட்​டிருப்​பது தெரிய வந்​துள்​ளது. தாக்​குதல் நடத்​தப்​பட்ட பிறகு தீவிர​வா​தி​கள் அடில் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடு​களில் பாது​காப்​புப் படை​யினர் சோதனை நடத்​தினர்.

அனந்​த​நாக் பகு​தி​யில் உள்ள அடில் வீட்​டிலும், அவந்​தி​போரா பகு​தி​யில் உள்ள ஆசிப் வீட்​டிலும் கடந்த வியாழக்​கிழமை இரவு பாது​காப்​புப் படை​யினர் சோதனை நடத்​தினர். அப்​போது, ஒரு வீட்​டில் ஏராள​மான வெடிபொருட்​கள் மறைத்து வைத்​திருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்து அந்த வெடிப்​பொருட்​களை பாது​காப்​புப் படை வீரர்​கள் வெடிக்க செய்​தனர். இதில் ஒரு வீடு தரைமட்​ட​மானது. மற்​றொரு தீவிர​வா​தி​யின் வீடு புல்​டோசர் மூலம் இடிக்​கப்​பட்​டது என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

காஷ்மீரை சேர்ந்த அடில் கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்​தான் சென்​றுள்​ளார். அங்கு தீவிர​வாத பயிற்சி பெற்ற பின்​னர் கடந்த ஆண்டு காஷ்மீர் திரும்​பி​யுள்​ளார். இவர்​தான் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களுக்கு தாக்​குதல் நடத்த வழி நடத்தி சென்​றுள்​ளார். இவர்களை பற்றி தகவல் தெரி​விப்​பவர்​களுக்கு ரூ.20 லட்​சம்​ பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x