Published : 25 Apr 2025 08:07 AM
Last Updated : 25 Apr 2025 08:07 AM

பஹல்காம் தாக்கம்: பாகிஸ்தானியரின் விசா ரத்து முதல் அமெரிக்கா எச்சரிக்கை வரை

சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட விசாக்கள், மேலும் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதன்படி ஏப்ரல் 27-ம் தேதிக்குள் அனைத்து பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. மருத்துவ விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தானியருக்கு மட்டும் ஏப்ரல் 29-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சாத் அகமதுக்கு மத்திய வெளியுறவுத் துறை சம்மன் அளித்திருந்தது. இதன்படி டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை அலுவலகத்தில் அவர் நேற்று ஆஜரானார். அப்போது பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஆலோசகர்கள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அமெரிக்கா எச்சரிக்கை: அமெரிக்க மக்​களுக்கு அந்​நாட்டு அரசு விடுத்​துள்ள பயண அறி​வுறுத்​தல் அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஜம்​மு-​காஷ்மீரில் தீவிர​வாத தாக்​குதல்​கள் மற்​றும் உள்​நாட்டு வன்​முறைக்கு வாய்ப்​புள்​ளது. எனவே, அங்கு செல்ல வேண்​டாம். ஜம்மு காஷ்மீர் மற்​றும் இந்​தியா, பாகிஸ்​தான் இடையே​யான எல்லை கட்​டுப்​பாட்டு பகுதி ஆகிய இடங்​களில் வன்​முறை அவ்​வப்​போது நடை​பெறுகிறது. காஷ்மீர் பள்​ளத்​தாக்​கின் சுற்​றுலா தலங்​களான ஸ்ரீநகர், குல்​மார்க், பஹல்​காம் ஆகிய இடங்​களி​லும் வன்​முறை நடை​பெறுகிறது.

இந்​தியா - பாகிஸ்​தான் எல்​லைப் பகு​தி​யில் தாக்​குதல் நடை​பெறு​வதற்​கான வாய்ப்பு உள்​ள​தால், எல்​லை​யி​லிருந்து 10 கி.மீ தொலை​வுக்​குள் பயணம் செய்​வதை​ அமெரிக்​கர்​கள் தவிர்க்க வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஜி20 நாடுகளின் தூதர்கள்: ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், மெக்சிகோ, சவுதி அரேபியா, தென்கொரியா, உள்ளிட்ட நாடுகளின் தூதர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை நேற்று சிறப்பு அழைப்பு விடுத்தது.

அந்த நாடுகளின் தூதர்கள் வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு வருகை தந்தனர். அப்போது, பஹல்காம் தாக்குதல் குறித்து ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் நிவாரணம்: அசாம் அரசு அறிவிப்பு - அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: கிளர்ச்சி நடவடிக்கைகளால் அசாம் நீண்ட காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை எங்களால் நன்கு உணர முடியும். இதனை நன்கு புரிந்து கொண்டதன் காரணமாகவே, தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் குடும்பங்களுக்கும் ஒரு சிறிய தொகையை நிவாரணமாக வழங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே நெருக்கமான உறவு இருப்பதால், வங்கதேசத்தை ஒட்டியுள்ள மாநில எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x