Published : 18 Apr 2025 09:38 AM
Last Updated : 18 Apr 2025 09:38 AM

வக்பு சட்ட வழக்​கில் பதில் அளிக்க மத்​திய அரசுக்கு 7 நாள் அவகாசம்: இப்​போதைய நிலை அப்​படியே தொடர உச்ச நீதி​மன்​றம் உத்​தரவு

புதுடெல்லி: வக்பு சட்​டத்​துக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கு​கள் குறித்து பதில் மனு தாக்​கல் செய்ய மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் 7 நாட்​கள் அவகாசம் அளித்​துள்​ளது. வக்பு வாரியங்கள், கவுன்​சில்​களில் புதிய நியமனங்​களை மேற்​கொள்ள கூடாது என்​றும் உத்​தர​விட்​டுள்​ளது. அடுத்த விசாரணை மே 5-ம் தேதிக்கு தள்​ளி வைக்​கப்​பட்​டுள்​ளது.

நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்ட வக்பு திருத்த சட்​டம், குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு பிறகு, நாடு முழு​வதும் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்​தது. இந்த சட்​டத்தை எதிர்த்து காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வா​தி, ஏஐஎம்​ஐஎம் ஆகிய கட்​சிகள், முஸ்​லிம் அமைப்​பு​கள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் 73 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்​னா, நீதிப​தி​கள் சஞ்​சய் குமார், கே.​வி.​விஸ்​வ​நாதன் அமர்​வில் இந்த மனுக்​கள் நேற்று முன்​தினம் விசா​ரணைக்கு வந்​தன. மனு​தா​ரர்​கள் - மத்​திய அரசு இடையி​லான வாதங்​களை தொடர்ந்​து, இந்த சட்​டத்​தின் சில பிரிவு​களுக்கு தடை விதிக்க விரும்​புவ​தாக தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா தெரி​வித்​தார். அப்​போது மத்​திய அரசின் வாதத்தை முன்​வைக்க சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா கூடுதல் அவகாசம் கோரி​னார். இதை தலைமை நீதிபதி ஏற்​றுக் கொண்​டார்.

இதைத் தொடர்ந்​து, 2-வது நாளாக நேற்று வழக்கு விசா​ரணை நடை​பெற்​றது. அப்​போது, மத்​திய அரசு சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறிய​தாவது:பல்​வேறு தரப்​பினரின் நிலங்​களை வக்பு வாரி​யங்​கள் உரிமை கொண்​டாடு​கின்​றன. நாடு முழு​வதும் ஏராள​மான கிராமங்​களை வக்பு வாரி​யங்​கள் கைப்​பற்​றி​யுள்​ளன. அப்​பாவி மக்​கள் நிலங்​களை இழந்​துள்​ளனர். இதை எதிர்த்து லட்​சக்​கணக்​கான மக்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பான முக்​கிய ஆவணங்​களை தாக்​கல் செய்ய குறைந்​த​பட்​சம் ஒரு வாரம் அவகாசம் தேவை. இந்த ஒரு வாரத்​தில் எந்த மாற்​ற​மும் நிகழ்ந்​து​வி​டாது. வக்பு திருத்த சட்​டத்துக்கு இடைக்​கால தடை எது​வும் விதிக்க கூடாது. இவ்​வாறு அவர் வாதிட்​டார்.

இதைத் தொடர்ந்​து, தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா அமர்வு கூறிய​தாவது: வக்பு திருத்த சட்​டத்​தில் பல்​வேறு நல்ல விஷ​யங்​கள் உள்​ளன. ஒட்டுமொத்த சட்​டத்​துக்​கும் தடை விதிக்க நாங்​கள் விரும்​ப​வில்​லை. குறிப்​பிட்ட சில விதி​களை மட்​டுமே மாற்ற வேண்​டும் என்று கூறுகிறோம். வழக்கு தொடர்​பாக மத்​திய அரசு ஒரு வாரத்​தில் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும். மாநில அரசுகள், வக்பு வாரி​யங்​களும் ஒரு வாரத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​ய​லாம்.

வக்பு வாரி​யங்​கள், கவுன்​சில்​களில் புதிய நியமனங்​களை மேற்​கொள்ள கூடாது. வக்பு வாரிய சொத்​துகளில் எந்த மாற்​ற​மும் செய்ய கூடாது. வக்பு சொத்து தொடர்​பாக எந்த உத்​தர​வும் பிறப்​பிக்க கூடாது. இப்​போதைய நிலை அப்​படியே தொடர வேண்​டும். வக்பு திருத்த சட்​டத்தை எதிர்த்து இன்​று​வரை ஏராள​மான மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. சுமார் 120 மனுக்​களை​யும் நாங்​கள் படித்​துக் கொண்​டிருக்க முடி​யாது.

எனவே, 5 பிர​தான மனுக்​கள் மட்​டுமே விசா​ரணைக்கு ஏற்​றுக் கொள்​ளப்​படும். எனவே, மனு​தா​ரர்​கள் ஒரு​மித்து முடிவு எடுக்க வேண்​டும். அடுத்த விசா​ரணை மே 5-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது. அன்​று இடைக்​கால உத்​தர​வு பிறப்​பிக்​கப்​படும்​. இவ்​வாறு தலை​மை நீதிப​தி அமர்​வு உத்​தரவிட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x