Published : 11 Apr 2025 07:09 AM
Last Updated : 11 Apr 2025 07:09 AM

மனித பற்கள் ஆபத்தான ஆயுதம் அல்ல: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: கடந்த 2020 ஏப்​ரலில் பெண் ஒரு​வர் தனது மைத்​துனிக்கு எதி​ராக புகார் அளித்​திருந்​தார். அப்​பு​காரில் அவர், “எனக்​கும் எனது மைத்​துனிக்​கும் ஏற்​பட்ட சண்​டை​யில் அவர் என்னை கடித்​தார்.

ஆபத்​தான ஆயுதத்​தால் எனக்கு தீங்கு விளை​வித்​தார்” என்று கூறி​யிருந்​தார். இது தொடர்​பாக மைத்​துனி மீது இந்​திய தண்​டனை சட்​டத்​தின் 324-வது பிரி​வின் கீழ் (ஆபத்​தான ஆயுதத்​தைப் பயன்​படுத்தி காயப்​படுத்​துதல்) வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்கை மும்பை உயர் நீதி​மன்​றத்​தின் அவுரங்​கா​பாத் அமர்வு விசா​ரித்​து, அண்​மை​யில் ரத்து செய்​தது. இது தொடர்​பாக நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில், “மனித பற்​களை கடும் தீங்கு விளைவிக்​கும் ஆபத்​தான ஆயுத​மாக கருத முடி​யாது. மரணம் அல்​லது கடுமை​யான தீங்கு ஏற்​படுத்​தக் கூடிய ஒரு கரு​வி​யின் மூல​மாக காயம் ஏற்​பட்​டிருந்​தால் மட்​டுமே இந்​திய தண்​டனைச் சட்​டத்​தின் 324-வது பிரி​வின் கீழ் தண்​டிக்க முடி​யும்” என்​று கூறி​யுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x