Published : 11 Apr 2025 06:45 AM
Last Updated : 11 Apr 2025 06:45 AM

மேற்கு வங்கத்தில் வேலை இழந்த ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016-ல் அரசுப் பள்​ளி​கள், அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு ஆசிரியர்​கள் தேர்வு செய்​யப்​பட்​ட​தில் முறை​கேடு​கள் நடந்​த​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக சிபிஐ விசா​ரணை நடத்தியது.

இந்த வழக்​கில் ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் அல்​லாத பணி​யாளர்​கள் 25,753 பேரின் பணி நியமனத்தை உயர் நீதி​மன்​றம் கடந்த ஆண்டு ரத்து செய்​தது. இதனை உச்ச நீதி​மன்​றம் கடந்த 3-ம் தேதி உறுதி செய்​தது.

இந்​நிலை​யில் வேலை இழப்பு மற்​றும் தங்​கள் சகாக்​கள் மீதான போலீஸ் நடவடிக்​கையை எதிர்த்து ஆசிரியர்​கள் நேற்று முன்​தினம் இரவு தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் தொடங்​கினர். கொல்​கத்​தா, சால்ட் லேக் பகு​தி​யில் உள்ள பள்​ளிப் பணி​கள் ஆணை​யம் வாயி​லில் இப்​போ​ராட்​டம் தொடங்​கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x