Published : 10 Apr 2025 08:01 AM
Last Updated : 10 Apr 2025 08:01 AM

அமராவதியில் சொந்த வீடு கட்டுகிறார் முதல்வர் சந்திரபாபு

அமராவதி: ஆந்​திர மாநில முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வுக்கு ஹைத​ரா​பாத்​தி​லும், திருப்​ப​தியை அடுத்​துள்ள சந்​திரகிரி மண்​டலம் நாரா​வாரிபல்லி கிராமத்​தி​லும் சொந்த வீடு உள்​ளது.

இந்நிலையில், முதல்​வ​ர் சந்​திர​பாபு நாயுடு, தலைநகர் அமராவ​தி​யில் சொந்த வீடு கட்ட முடிவு செய்​தார். இதனை தொடர்ந்​து, நேற்று வெல​கபுடி செயல​கம், இ-9 தேசிய நெடுஞ்​சாலை​யில் 1,455 சதுர அடி​யில் வீடு கட்ட நேற்று அடிக்​கல் நாட்டு விழா நடந்​தது.

அடிக்​கல் நாட்டு விழா​வில்மனைவி புவனேஸ்​வரி​யுடன் தம்​பதி சமேத​ராக பூமி பூஜை​யில் கலந்து கொண்​டார். இவர்​களு​டன் சந்​திர​பாபு​வின் மகனும், அமைச்​சரு​மான லோகேஷ் குடும்பத்துடன் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x