Published : 09 Apr 2025 02:42 PM
Last Updated : 09 Apr 2025 02:42 PM
புதுடெல்லி: “தமிழக முன்னேற்றத்துக்கு உழைத்தமைக்காகவும், இந்த சமூகத்துக்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவைக்காகவும் போற்றப்படுவார்.” என்று குமரி அனந்தனின் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “குமரி அனந்தன் இந்த சமூகத்துக்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவைக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான ஆர்வத்துக்காகவும் போற்றப்படுவார். தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சரத்தை பிரபலப்படுத்தவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அவரது மறைவு மிகுந்த வேதனையைத் தருகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி.” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 93. கடந்த சில தினங்ககளாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார்.
அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT