Published : 09 Apr 2025 06:59 AM
Last Updated : 09 Apr 2025 06:59 AM

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டம், உதயகிரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது ரஃபி. மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2020 மார்ச் மாதம், கரோனா பெருந்தொற்று ஊரடங்கின்போது 14 வயது 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு அந்த மாணவியை அச்சுறுத்தி 2021 டிசம்பர் வரை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

மாணவியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரை கண்ணூரில் உள்ள ஒரு கவுன்சிலிங் மையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தனக்கு நேர்ந்த துயரத்தை அச்சிறுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பழயங்காடி போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகம்மது ரஃபியை கைது செய்தனர். இந்நிலையில் முகம்மது ரஃபி மீதான இரண்டாவது வழக்கில் தலிபரம்பா போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.

இதில் அவர் ஒரு தொடர் குற்றவாளி என்பதை கவனத்தில் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் ரூ.9 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x