Published : 08 Apr 2025 06:14 AM
Last Updated : 08 Apr 2025 06:14 AM
அயோத்தி: கடவுள் ராமர் பிறந்த தினம் ஒவ்வாரு ஆண்டும் ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நேற்று முன்தினம் ராமநவமி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மாலையில் சரயு நதியின் சவுத்ரி சரண்சிங் படித்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனால் அப்பகுதி தீப ஒளியில் ஜொலித்தது.
இதையடுத்து சரயு நதிக்கரையில் சந்தியா ஆரத்தி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக ராமநவமியை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT