Published : 08 Apr 2025 06:30 AM
Last Updated : 08 Apr 2025 06:30 AM

பாஜகவுக்கு ரகசிய படை: அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று கூறியதாவது: ஜெர்​மனி சர்​வா​தி​காரி ஹிட்​லருக்​கு, ஸ்ட்​ரோமங்​டேலுங் என்ற படை இருந்​தது. இது ஹிட்​லரின் ரகசிய படை​யாக செயல்​பட்​டது. ஹிட்​லர் காலத்​தில் நடந்த சம்​பவங்​கள் தற்​போது உ.பி.யில் நடை​பெற்று வரு​கின்​றன. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் கோரக்​பூர் சென்​று​விட்டு லக்னோ திரும்​பும்​போதெல்லாம் கொலை நடை​பெறுகிறது.

இதன் பின்​னணி​யில் கோரக்​பூரை சேர்ந்த ரகசிய படை இருக்​கிறது. இது பாஜக​வின் ரகசிய படை ஆகும். கர்​னிசேனா போன்ற அமைப்​பு​களுக்கு முதல்​வர் யோகி பகிரங்​க​மாக ஆதரவு அளிக்​கிறார். இவ்​வாறு அகிலேஷ் யாதவ் தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x