Published : 08 Apr 2025 07:06 AM
Last Updated : 08 Apr 2025 07:06 AM
பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7,200 வங்கி கணக்குகளைஜம்மு-காஷ்மீர் காவல் துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ நகர் காவல் துறை கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசைன் கூறியதாவது: வாடிக்கையாளர்களிடம் கமிஷன் தருவதாக கூறி அவர்களின் வங்கி கணக்குகளை பணமோசடிக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்று மோசடியாளர்கள் பயன்படுத்தும் வங்கி கணக்குகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சோதனை நடத்தப்பட்டது. இதில், 7,200 வங்கி கணக்குகள் சைபர் குற்றங்கள் மற்றும் பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் பல கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், எவ்வளவு தொகை என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
நடப்பாண்டில் இதுவரை 7,200 மோசடி வங்கி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் அதன் மொத்த எண்ணிக்கை 30,000-த்தை தாண்டும் என்பது தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் மற்றும் பணமோசடி தொடர்பாக 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில், 19 பேர் ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள். மோசடி தொடர்பாக 4 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது மோசடி சம்பவங்கள் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் அதிகரித்து வருவது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இம்தியாஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT