Published : 06 Apr 2025 06:50 AM
Last Updated : 06 Apr 2025 06:50 AM

மேற்குவங்க முதல்வர் மம்தா சிறைக்கு செல்வார்: பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா கருத்து

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016-ம் ஆண்டு 25 ஆயிரம் ஆசிரியர்​கள் நியமனம் செய்​த​தில் முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தால் அது செல்​லாது என உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது. இது குறித்து பாஜக செய்தி தொடர்​பாளர் சம்​பித் பத்ரா கூறிய​தாவது: மேற்கு வங்க மாநிலத்​தில் நடை​பெற்ற ஆசிரியர் நியமனத்​தில் மிகப்பெரியள​வில் ஊழல் நடை​பெற்​றதற்கு முதல்​வர் மம்தா பானர்ஜி​தான் காரணம். நாட்​டில் சட்​டத்​தின் ஆட்சி நடை​பெறுகிறது. மேற்​கு​வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமை​யும்​போது, மம்தா பானர்ஜி மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும். அவர் சிறை செல்​வார்.

சில நாட்​களுக்கு முன்பு ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் உரை​யாற்​றிய மம்​தா பானர்​ஜி,தன்னை பெண் புலி என கூறி​னார். எந்த புலி​யும் ஊழலில் ஈடு​படு​வ​தில்​லை. மேற்​கு​வங்​கம் முழு​வதும் ஊழல் நடை​பெற மம்தா அரசு அனு​ம​தித்​துள்​ளது. இதனால் லட்​சக்​கணக்​கான மக்​கள் அவதிப்​படு​கின்​றனர். ஆசிரியர் நியமனத்​தில் மிகப் பெரியள​வில் ஊழல் நடை​பெற்​றுள்​ளதை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x