Published : 05 Apr 2025 12:58 AM
Last Updated : 05 Apr 2025 12:58 AM

13 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை கோரும் மனு தள்ளுபடி

குழந்தைகள் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரும் மனுவை விசரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

சமூக ஊடகத்தை பயன்படுத்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடை விதிக்க கோரி ஜெப் அறக்கட்டளை சார்பில் மோகினி பிரியா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், வயது சரிபார்ப்பு முறை, பயோமெட்ரிக் போன்ற முறைகளை பயன்படுத்த மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை பின்பற்ற தவறும் சமூக ஊடகங்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் பி.ஆர்.காவை மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு மறுத்துவிட்டது. ‘‘இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம். இது குறித்து மனுதாரர் மத்திய அரசுக்கு மனு செய்து, நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டுகோள் விடுக்கலாம். அந்த மனு சட்டப்படி 8 வாரங்களுக்குள் பரிசீலிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x