Last Updated : 04 Apr, 2025 01:11 AM

1  

Published : 04 Apr 2025 01:11 AM
Last Updated : 04 Apr 2025 01:11 AM

மத்திய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதா: முஸ்லிம் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்

புதுடெல்லி: வக்பு சட்ட திருத்த மசோ​தா மக்​களவை​யில் நேற்​று​முன்​தினம் நிறைவேறியது. இதுகுறித்து அகில இந்​திய முஸ்​லிம் தனிச்​சட்ட வாரி​யம் கூறும்​போது, “மசோ​தா​வின் புதிய விதி​களின்​படி, முஸ்​லிம்​களுக்கு நன்​மையை விட தீமை​கள் அதி​கம். மசோ​தாவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுப்​போம்” என்று கூறி​யுள்​ளது.

வாரி​யத்​தின் மூத்த நிர்​வாக உறுப்​பினர் மவுலானா காலித் ரஷீத் பிரங்கி மெஹலி கூறுகை​யில், “தனிச்​சட்ட வாரி​யம் உள்​ளிட்ட பல முஸ்​லிம் அமைப்​பு​கள் இந்த மசோதா குறித்த தங்​கள் குறை​களை நாடாளு​மன்ற கூட்டு குழு​விடம் தெரி​வித்​துள்​ளன. அவற்​றில் ஒன்று கூட பரிசீலிக்​கப்​பட​வில்​லை” என்றார்.

உ.பி,​யின் பரேலி​யில் உள்ள இத்​திஹாத்​-இ-மில்​லத் கவுன்​சில் தலை​வர் மவுலானா தவு​கீர் ராசா கூறும்​போது, “இத்​தகைய தவறான சட்ட திருத்​தங்​களை நாங்​கள் அங்​கீகரிக்க முடி​யாது. மசோ​தாவுக்​கான எதிர்ப்பு போது​மான​தாக இல்​லை. வக்பு சொத்​துகளில் சட்ட விரோத ஆக்​கிரமிப்பு செய்​த​தாக எங்​கள் மீது குற்​றம் சாட்​டப்​படு​கிறது.

சொத்துகள் பறிக்கப்படும்: ஆனால் எங்​கள் முன்​னோர்​கள் தங்​கள் சொத்​துக்​களை வக்​புக்கு அர்ப்​பணித்​தனர். அதையே, பல முஸ்​லிம் ஆட்​சி​யாளர்​களும் செய்​தார்​கள். இது​வன்றி கோயில்​களை கட்​டியதுடன் அவர்​களுக்கு சொத்​துகளை​யும் நன்​கொடை​யாக அளித்​தனர். இப்​போது, முஸ்​லிம்​களிடம் இருந்து வக்பு சொத்​துகள் பறிக்​கப்​படு​கின்​றன” என்​றார்.

அச்சுறுத்தல் இல்லை: அதே​நேரத்​தில், அகில இந்​திய முஸ்​லிம் ஜமாத் தலை​வர் மவுலானா சகாபுதீன் ரிஸ்வி கூறும்​போது, “இந்த மசோ​தா​வால் முஸ்​லிம்​களுக்கு எந்த அச்​சுறுத்​தலும் இல்​லை. இந்த மசோதா நன்​மை​களையே தரும். சில அரசி​யல் குழுக்​கள் இந்த மசோதா குறித்து தேவையற்ற அச்​சத்​தைப் பரப்​புவதன் மூலம் பொது​மக்​களை தவறாக வழிநடத்​துகின்​றனர். முஸ்​லிம்​களின் மசூ​தி​கள், ஈத்​காக்​கள், தர்​காக்​கள் மற்​றும் கல்​லறை​கள் எது​வும் பறிக்​கப்​ப​டாது என்று உறு​தி​யளிக்​கிறேன். இது வெறும் வதந்தி மட்​டுமே” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x