Published : 03 Apr 2025 06:30 AM
Last Updated : 03 Apr 2025 06:30 AM

வக்பு சட்டத் திருத்த மசோதாவில் ஒரே ஒரு திருத்தம் கோரும் தெலுங்கு தேசம் கட்சி

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்​களவை​யில் வக்பு சட்​டத் திருத்த மசோதா நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்​திர முதல்​வரு​மான சந்​திர​பாபு நாயுடு, சட்ட வல்​லுநர்​களு​டன் விரி​வான ஆலோ​சனை நடத்​தி​யிருக்​கிறார். இந்​நிலை​யில் தெலுங்கு தேசம் கட்சி வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘‘வக்பு சட்​டத் திருத்த மசோ​தா​வில் உள்ள மற்ற அனைத்து திருத்​தங்​களை​யும் ஆதரிக்​கிறோம்.

ஆனால், மாநில வக்பு வாரி​யத்​தில் முஸ்​லிம் அல்​லாத ஒரு​வர் இடம்​பெற வேண்​டும் என்று மசோ​தா​வில் கூறி​யுள்​ளதை மாற்ற வேண்​டும். ஏனெனில், மாநில வக்பு வாரி​யத்​தில் முஸ்​லிம் அல்​லாதவர் இடம்​பெற வேண்​டு​மா, வேண்​டாமா என்​பதை அந்​தந்த மாநிலங்​களின் அதி​கார வரம்​புக்கு விட்​டு​விட வேண்​டும் என்று நாடாளு​மன்​றத்​தில் தெலுங்கு தேசம் கட்சி வலி​யுறுத்​தும்’’ என்​றன.

தவிர வக்பு வாரி​யத்​தில் பெண்​களும் இடம்​பெற வேண்​டும் என்று வக்பு மசோ​தா​வில் கூறி​யுள்​ளதை வரவேற்​கிறோம். இது வளர்ச்​சிக்​கான மாற்​ற​மாக இருக்​கும் என்று தெலுங்கு தேசம் கட்​சி​யினர் கூறி​யுள்​ளனர். முன்​ன​தாக வக்பு மசோதா தாக்​கல் செய்​யும் போது மக்​களவை​யில் தெலுங்கு தேசம் கட்​சி​யின் எம்​.பி.க்​கள் அனை​வரும் தவறாமல் பங்​கேற்க வேண்​டும் என்​று கட்​சி கொற​டா உத்​தரவு பிறப்​பித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x