Last Updated : 03 Apr, 2025 06:30 AM

3  

Published : 03 Apr 2025 06:30 AM
Last Updated : 03 Apr 2025 06:30 AM

மகா போதி கோயில் நிர்வாகக் குழுவில் இந்துக்களை நீக்ககோரி பிஹாரில் பவுத்தர்கள் மீண்டும் தீவிர போராட்டம்

1949-ம் ஆண்டு மகா போதி கோயில் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று பவுத்தர்கள் அமைதிப் பேரணி நடத்தினர். | படம்: பிடிஐ |

புதுடெல்லி: பிஹார் மாநிலம் புத்த கயா​வில் அமைந்​துள்ளது மகா போதி கோயில். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரம் இதற்​குள் உள்​ளது. இக்​கோ​யிலை நிர்​வகிக்க, மகா போதி கோயில் சட்​டம் 1949 (பிஜிடிஏ)-ஐ பிஹார் மாநில அரசு இயற்​றியது. இச்​சட்​டத்​தின்​படி, மகா போதி கோயிலின் நிர்​வாக குழு​வில் பவுத்​தர்​கள் மற்​றும் இந்​துக்​கள் தலா 4 பேரை பிஹார் அரசு நியமிக்​கிறது.

இக்​குழு​வின் நிரந்தர தலை​வ​ராக புத்த கயா மாவட்ட ஆட்​சி​யர் இருப்​பார். இந்​நிலை​யில், கோயில் நிர்​வாக குழு​வில் இந்​துக்​கள் இருக்க கூடாது. முழு அதி​கார​மும் தங்களுக்கே அளிக்க வேண்​டும் என நீண்ட கால​மாக பவுத்தர்கள் கோரி வரு​கின்றனர்.

இந்த கோரிக்​கையை வலி​யுறுத்தி 2 மாதங்​களாக மீண்​டும் பவுத்​தர்​கள் தீவிர போராட்​டத்​தில் இறங்கி உள்​ளனர். மகா போதி கோயில் அகில இந்​திய பவுத்தர்கள் சங்​கத்​தினர் (ஏஐபிஎப்) இப்​போ​ராட்​டத்தை முன்​னின்று நடத்​துகின்​றனர். மகா போதி கோயி​லில் கடந்த பிப்​ர​வரி 27-ம் தேதி இரவு வழக்​கம் போல் பவுத்​தம் அல்​லாத அன்​றாட சடங்​கு​கள் தொடங்​கின. இதை எதிர்த்து பவுத்த துறவி​கள் சிலர் கோயில் உள்​ளேயே உண்​ணா​விரத போராட்​டம் தொடங்​கினர். அவர்​களை அங்​கிருந்து வெளி​யேற்ற முயற்​சிக்​கப்​பட்​டது.

இதையடுத்து ஏஐபிஎப் அமைப்​பினர் போராட்​டத்தை தீவிரப்​படுத்தி வரு​கின்​றனர். மகா போதி கோயி​லின் நிர்​வாகம் 13-ம் நூற்​றாண்டு வரை பவுத்​தர்​களின் கைகளில் இருந்​தது. இது துருக்​கிய படையெடுப்​பாளர்​களின் வரு​கைக்​குப் பிறகும், 1590-ல் கயா​வில் மஹந்த் கமாண்டி கிரி என்ற துறவி வரும் வரை​யிலும், அதன் நிர்​வாகத்​தில் யார் இருந்​தார்​கள் என்​பது தெரிய​வில்​லை.

மஹந்த் கமாண்டி கிரி, மகாபோதி கோயி​லில் புத்த கயா மடால​யத்தை நிறு​வி​னார். அதன் பிறகு அந்த மடால​யம் ஒரு இந்து
மடமாக மாறியது. கிரி​யின் சந்​த​தி​யினர் இன்​னும் மகா போதி கோயி​லின் நிர்​வாகத்​தில் இடம்​பெற்​றுள்​ளனர். மகா​போதி கோயிலை ஒரு இந்து மதத் தலம் என்று இந்​துக்​கள் அழைக்​கின்​றனர்.

இதற்கு விஷ்ணு​வின் 9-வது அவதா​ர​மாக கவுதம புத்​தரை இந்​துக்​கள் கருது​வது​தான் காரணம். கடந்த 2002-ம் ஆண்டு மகா போதி கோயிலுக்கு யுனெஸ்கோ உலக பாரம்​பரிய அந்​தஸ்தை வழங்​கியது. மகா போதி கோயிலை பவுத்​தர்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும் என்ற கோரிக்கை 19-ம் நூற்​றாண்​டிலேயே தொடங்கி விட்​டது. இந்த இயக்​கம் இலங்கை துறவி அனகாரிக தர்​ம​பால​ரால் தொடங்​கப்​பட்​டது. அப்​போது, மகா போதி கோயிலை தங்கள் கட்​டுப்​பாட்​டுக்​குள் வைத்​திருந்த இந்து பூசா​ரி​களுக்கு எதி​ராக அவர் நீதி​மன்​றம் சென்​றார்.

இதையடுத்து 1949-ம் ஆண்டு பிஹார் பேரவை மகா போதி கோயில் சட்​டம் 1949-ஐ இயற்​றியது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மத்​திய அரசின் வழி​பாட்​டுத் தலங்​கள் பாது​காப்பு சட்​டம் 1991-ன் கீழ் மகா போதி கோயிலும் வரு​கிறது. இதன் காரண​மாக கோயில் நிர்​வாகத்​தி​லும் எந்த மாற்​ற​மும் செய்ய முடி​யாது. இதை எதிர்த்​தும் 2 பவுத்த துறவி​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு நிலு​வை​யில் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x