Published : 01 Apr 2025 11:59 PM
Last Updated : 01 Apr 2025 11:59 PM
புதுடெல்லி: ஜார்க்கண்டில் தேசிய அனல்மின் நிறுவனத்தால் (என்டிபிசி) இயக்கப்பட்டு வரும் இரு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் அவற்றின் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.
பிகாரின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள ககல்கான் சூப்பர் அனல்மின் நிலையத்தையும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பராக்கா அனல்மின் நிலையத்தையும் இணைக்கும் வகையில் என்டிபிசி சார்பில் தனி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் சரக்கு ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையி்ல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் என்டிபிசி ரயில் பாதையில் இரு சரக்கு ரயில்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இந்த ரயில்களின் ஓட்டுநர் இருவரும் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கவுஷிக் மித்ரா கூறுகையில், “விபத்து நிகழ்ந்த ரயில் பாதையும் மற்றும் சரக்கு ரயில்களும் என்டிபிசி-க்கு சொந்தமானவை. இதற்கும் இந்திய ரயில்வேவுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT