Published : 03 Mar 2025 05:19 AM
Last Updated : 03 Mar 2025 05:19 AM

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பளம் உயரவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் கவலை

புதுடெல்லி: நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளை ஆய்வு செய்தபோது கடந்த 7 ஆண்டுகளில் தொழிலாளர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை வளர்ச்சியைவிட வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தெரிகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் தொழிலாளர் எண்ணிக்கை 34.7 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் 43.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சம்பள தரவுகளை ஆய்வு செய்​தால், தொழிலா​ளர்​களின் சம்பளம் கடந்த 7 ஆண்டு​களாக அதிகரித்​துள்ளது. ஆனால் பணவீக்​கத்​துக்கு ஏற்ப சம்பளம் உயரவில்லை. இதற்கு தொழிலா​ளர்​களின் திறன் குறைவு​தான் காரணம். பல நாடு​களின் தரவுகளை ஆய்வு செய்​தால், இங்கு தொழிலா​ளர்​களின் திறன் குறைவாக உள்ளது. இதை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல் மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். திறன் அதிகரிக்​கும்​போது​தான், உற்பத்தி அதிகரிக்​கும், ஊதிய​மும் அதிகரிக்​கும்​. இவ்​வாறு அவர் கூறினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x