Published : 03 Mar 2025 05:08 AM
Last Updated : 03 Mar 2025 05:08 AM

2 பேருக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்? - தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹர்பகுதி​யில் உள்ள ஒருவரின் வாக்​காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தர பிரதேச மாநிலம் திதர்​கஞ்ச் பகுதி​யில் உள்ள ஒருவரின் வாக்​காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளன என்று திரிண​மூல் காங்​கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்​டினர்.

இதன் மூலம் போலி வாக்​காளர்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த வாக்​காளர்கள் மே.வங்கத்​தில் உள்ளதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்​டி​னார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்​துள்ளது. அதில்கூறி​யிருப்​ப​தாவது: இரண்டு வெவ்​வேறு மாநிலங்​களில் வழங்​கப்​பட்ட வாக்​காளர் அடையாள அட்டை எண்கள், 2 பேருக்கு ஒன்று போல் இருக்​கலாம். ஆனால், அவரவர் மாநிலங்​களில் உள்ள தொகு​திக்​குட்​பட்ட ஒரு வாக்​குச் சாவடி​யில்மட்டும்​தான் வாக்​களிக்க முடி​யும். 2 பேருக்கு ஒரே வாக்​காளர் அடையாள அட்டை இருந்​தா​லும், அவர்களை போலி வாக்​காளர்கள் என்றோ அல்லது நகல் (டூப்​ளி​கேட்) வாக்​காளர்கள் என்றோ கருது​வதற்​கில்லை.

அவர்​களால் 2 இடங்​களில் வாக்​களிக்​க​வும் முடி​யாது. எனினும், இதுபோல் 2 பேருக்கு ஒரே வாக்​காளர் அடையாள அட்டை எண் வருவதை தவிர்க்க ‘எரோநெட்’ தளத்​தில் மாற்​றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு தலைமை தேர்​தல் ஆணையம்​ கூறி​யுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x