Published : 27 Feb 2025 06:45 AM
Last Updated : 27 Feb 2025 06:45 AM
கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் கூறியுள்ளதாவது: கடந்த 2023-24-ம் நிதியாண்டில் நீதிமன்ற வழக்குகளுக்காக ரூ.66 கோடியை மத்திய அரசு செலவழித்துள்ளது. கடந்த 2022-23-ம் நிதியாண்டை விட இது ரூ.9 கோடி அதிகமாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நீதிமன்ற வழக்குகளுக்காக ரூ.409 கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு செலவு செய்துள்ளது.
2014-15-ம் நிதியாண்டில் ரூ.26.64 கோடியும், 2015-16-ல் ரூ.37.43 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.
7 லட்சம் வழக்கு நிலுவை: நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட வகையில் சுமார் 7 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் மத்திய நிதியமைச்சகம் சார்பில் மட்டும் சுமார் 2 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT