Published : 27 Feb 2025 01:19 AM
Last Updated : 27 Feb 2025 01:19 AM
கொல்கத்தா: மகா கும்பமேளா குறித்த மேற்கு வங்க முதல்வர் மம்தான பானர்ஜியின் கருத்து தவறானது என பாஜக தலைவரும், நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
144 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நிகழும் என்ற கருத்தில் உண்மையில்லை. எனக்கு தெரிந்தவரை புனித நீராடுவது என்பது ஆண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடியது. ஏனெனில் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் கங்கா சாகர் மேளாவுக்கு ஏற்பாடு செய்கிறோம். அதனால்தான் புனித நீராடுதல் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். தற்போது நடைபெறுவது மிருத்யு கும்பம்.
மகா கும்பமேளா மீதும், கங்கை மாதாவின் மீதும் மரியாதை உள்ளது. ஆனால், மகா கும்பமேளாவுக்கு சரியான திட்டமிடல் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரின் கருத்து தவறானது என மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது:
உ.பி. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் 70 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இது, சனாதன தர்மத்தின் மகத்தான செல்வாக்கை, சக்தியை உலகுக்கு உணர்த்தியுள்ளது. எனவே, மகா கும்பமேளா குறித்த முதல்வர் மம்தாவின் கருத்து தவறு" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT