Published : 22 Feb 2025 05:37 AM
Last Updated : 22 Feb 2025 05:37 AM

மதரஸா பட்டங்கள் குறித்த தீர்ப்பு: மாணவர்கள் மனு மீது பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மதரஸா கல்வி நிலையங்கள் வழங்கும் பட்டங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் நிவாரணம் கோரி தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது பதிலளிக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மதரஸா கல்வி நிலையங்கள் வழங்கும் பட்டங்கள் தொடர்பான வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீரப்பில் அடிப்படை உரிமைகள் அல்லது வேறு ஏதேனும் அரசியலமைப்பு விதிகளை மீறும்பட்டத்தில் அது அரசமைப்பு சட்டத்துக்கு முரணானதாக அறிவிக்கப்படும். அந்த வகையில், மதரஸா கல்வி நிலையங்கள் வழங்கும் உயர் கல்விக்கான பட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து 10 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், மதராஸா படிப்பில் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் மதரஸாக்களில் ஃபாசில் மற்றும் கமில்' (இளங்கலை மற்றும் முதுகலை பட்டம்) படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீது மத்திய அரசு, உத்தர பிரதேச அரசு மற்றும் உ.பி. மதரஸா கல்வி வாரியம் ஆகியவை பதிலளிக்க கோரி உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x