Last Updated : 10 Feb, 2025 08:05 AM

2  

Published : 10 Feb 2025 08:05 AM
Last Updated : 10 Feb 2025 08:05 AM

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு தோல்வியிலும் வெற்றி?

டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகம்

புதுடெல்லி: டெல்லி சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக, ஆம் ஆத்மிக்கான நேரடி மோதலில், காங்​கிரஸ் கட்சி போட்​டி​யிலேயே இல்லாத நிலை இருந்​தது. 3-வது முறையாக இந்த தேர்​தலிலும் காங்​கிரஸ் கட்சிக்கு ஒரு தொகு​தி​யிலும் வெற்றி கிடைக்க​வில்லை.

இருப்​பினும், இந்த தேர்​தலில் 6.34 சதவீத வாக்​குகளை பெற்றுள்​ளது. இது கடந்த 2020 தேர்​தலில் பெற்றதை விட 2 சதவி​கிதம் அதிகம். பாஜக 45.56 சதவீதம், ஆம் ஆத்மிக்கு 43.57 சதவீத வாக்​குகளை பெற்றன. இவற்றுக்​கிடையேயான வித்​தி​யாசம் வெறும் 1.99 சதவி​கிதம் மட்டுமே. இதன்​மூலம், 10-க்கும் மேற்​பட்ட தொகு​தி​களில் காங்​கிரஸ், ஆளும் ஆம் ஆத்மி கட்சி​யின் வெற்றிக்கு தடையாக இருந்தது தெளிவாகிறது. இதை தனது தோல்​வி​யிலும் வெற்றி​யாகவே காங்​கிரஸ் கருதுகிறது.

ஏனெனில், இந்தியா சுதந்​திரம் அடைந்தது முதல் காங்​கிரஸ் மத்தி​யிலும் பெரும்​பாலான மாநிலங்​களி​லும் பல ஆண்டு​களாக ஆட்சி அமைத்து தனி ஆவர்த்​தனம் நடத்தி வந்தது. இதன்பிறகு 1970-ம் ஆண்டு​களில் உருவான ஜனதா கட்சி​யால் காங்​கிரஸ் ஆட்சிகளுக்கு முதல்​முறையாக நெருக்கடி ஏற்படத் துவங்​கியது.

இந்த ஜனதா​வின் முக்கிய கட்சியாக இருந்த பாஜக தற்போது தேசிய அளவில் காங்​கிரஸை மிஞ்​சும் கட்சியாக வளர்ந்து நிற்​கிறது. இதனால், பாஜக​வின் எதிர்​க்கட்​சியாக தம்மை முன்னிறுத்துவதே காங்​கிரஸுக்கு பெரும் சவாலாகி விட்​டது.

இந்நிலை​யில், ஆம் ஆத்மி​கட்​சி​யால், பஞ்சாபில் ஆட்சியை இழந்தது காங்​கிரஸ். கோவா, குஜராத், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்​களி​லும் ஆம் ஆத்மி​யால் காங்​கிரஸுக்கு சில இழப்புகள் ஏற்பட்டன. ஆம் ஆத்மி​யால், காங்​கிரஸுக்கு டெல்​லி​யில் ஒரு தொகு​தி​யிலும் வெற்றி​பெறாத நிலை ஏற்பட்​டுள்​ளது. இதன் காரண​மாக, பாஜகவை விட ஆம் ஆத்மியை தன் முதல் எதிரி​யாகக் காங்​கிரஸ் கருத வேண்டிய நிலைக்கு தள்ளப்​பட்​டுள்​ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் காங்​கிரஸ் கட்சி​யின் தேசிய நிர்​வாகிகள் வட்டாரங்கள் கூறும்​போது, ‘பாஜக​விற்கு எதிராக, சேரவே முடியாத பரம விரோதக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ‘இண்​டியா’ எனும் பெயரில் கூட்​டணியை உருவாக்​கின. இதில் காங்​கிரஸுக்கு எதிராக கேஜ்ரிவால்​தான் முதல் தலைவராக எதிர்ப்பு குரல் கொடுத்​தார். இவரை தொடர்ந்து மேற்​கு​வங்க முதல்​வரும் திரிண​மூல் காங்​கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, உபியின் சமாஜ்வாதி எனப் பலரும் கிளம்பிவிட்​டனர்.

இந்த நிலை தொடர்ந்​தால் மக்களவை​யில் காங்​கிரஸுக்கு கிடைத்த எதிர்​க்கட்சி அந்தஸ்​தும் அடுத்​த​முறை சரிந்து விடும். எனவே, பாஜகவை விட ஆம் ஆத்மியை தீவிரமாக எதிர்க்க வேண்டி வந்தது. ஆம் ஆத்மி​யுடன் இணைந்து போட்​டி​யிட்​டிருந்​தால் டெல்லி முடிவுகள் மாறும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், பாஜகவை விட, ஆம் ஆத்மியை முதலில் ஒழிப்பது காங்​கிரஸின் எதிர்​காலத்​துக்கு அவசி​யம். டெல்லி தோல்​வியால் காங்​கிரஸ் துவளவில்லையே தவிர ஆம் ஆத்மி​யின் சரிவால் எங்களுக்கு வெற்றி என்றே கருதுகிறோம்” எனத் தெரி​வித்​தன.

ஆம் ஆத்மிக்கு அதிகமான இழப்பு டெல்​லி​யின் மூன்று தொகு​தி​களில் ஏற்பட்​டுள்​ளது. புதுடெல்​லி​யில் கேஜ்ரிவால், ஜங்புரா​வில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் கிரேட்டர் கைலாஷில் மாநில அமைச்​சர் சவுரவ் பரத்​வாஜ் ஆகியோர் காங்​கிரஸால் தோல்​வியை சந்தித்​தனர். இந்த மூன்​றின் வெற்றி வித்​தி​யாசத்தை விட, காங்​கிரஸ் அதிகமான வாக்​குகளை பெற்றிருந்​தது. கால்​காஜி​யில் முதல்வர் ஆதிஷி 3,521 வாக்​கு​களில் பாஜகவின் ​முதல்​வர் வேட்​பாளர்​களில் ஒரு​வரான ரமேஷ் பிதூரியை வென்​றுள்​ளார். இங்கு ​காங்​கிரஸின் அல்கா லம்​பாவுக்கு கிடைத்த 4,342 வாக்​குகளை விட சிறிது கூடு​தலாகப் பெற்றிருந்தால் ஆ​திஷி​யும் தோல்​வி பெற்​றிருப்​பார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x