Published : 10 Feb 2025 07:43 AM
Last Updated : 10 Feb 2025 07:43 AM

டெல்லியில் பாஜக.வுக்கு கிடைத்த வெற்றி முக்கியமான அரசியல் மாற்றம்: சர்வதேச ஊடகங்கள் கருத்து

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்​தலில் பாஜக. பெற்ற வெற்றி, சர்வதேச ஊடகங்​களின் கவனத்தை கவர்ந்​துள்ளது. இதை முக்​கியமான வெற்றி, மிகப் பெரிய அரசியல் மாற்றம் என சர்வதேச ஊடகங்கள் கூறி​யுள்ளன.

ராய்ட்​டர்ஸ் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்தி​யில், “டெல்லி தேர்தல் முடிவு, பிரதமர் நரேந்திர மோடி​யின் கட்சிக்கு முக்​கியமான வெற்றி. நிர்​வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் கட்டமைப்​பில் கவனம் செலுத்தி பாஜக சிறப்பாக பிரச்​சாரம் செய்​தது. நகர்ப்புற மையங்​களில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரி​வித்த நடுத்தர வர்க்க வாக்​காளர்களை பாஜக ஈர்த்​துள்ளதை இந்த வெற்றி காட்டு​கிறது” என தெரி​வித்​துள்ளது.

அசோசி​யேட்டட் பிரஸ்: அசோசி​யேட்டட் பிரஸ் (ஏபி) நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்தி​யில், “தலைநகர் டெல்​லி​யில் பாஜக மீண்​டும் ஆட்சியை கைப்​பற்றி​யுள்ளது முக்​கியமான திருப்​பம். ஆம் ஆத்மி கட்சிக்கு செல்​வாக்கு குறைந்​துள்ளது. கட்சிக்​குள் ஏற்பட்ட பிரச்​சினை இந்த தோல்​வி​யில் முக்கிய பங்காற்றியது. காங்​கிரஸ் வாக்கு சதவீதம் ஓரளவு அதிகரித்​தா​லும், போட்​டி​யில் மிக நீண்ட தொலை​விலேயே உள்ளது” என கூறி​யுள்​ளது.

ஸ்பெ​யின் செய்தித்​தாள் ‘எல் பைஸ்’ வெளி​யிட்​டுள்ள தலைப்​பில், “சுமார் 30 ஆண்டு​களுக்​குப்​பின் டெல்​லி​யில் பிரதமர் மோடி கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது” என குறிப்​பிட்​டுள்​ளது. பாஜக.​வின் வெற்றி டெல்லி நிர்​வாகத்​தில் ஏற்படுத்​தும் தாக்​கங்கள் குறித்து இந்த கட்டுரை​யில் விவரிக்​கப்​பட்​டுள்​ளது.

‘தி பினான்​சியல் டைம்ஸ்’ வெளி​யிட்​டுள்ள செய்தி​யில் டெல்லி வெற்றி இந்தியா முழு​வதும் தாக்​கத்தை ஏற்படுத்​தும் என தெரி​வித்​துள்ளது. வலுவான மாநில கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தற்போது சிக்கலை சந்தித்​துள்ளது என்றும், டெல்​லியை ஆம் ஆத்மி இழந்​தது, அதன் லட்சி​யங்கள் பல கேள்விகளை எழுப்​பி​யுள்ளது என்றும் கூறி​யுள்​ளது.

அல் ஜசீரா செய்தி நிறு​வனத்​துக்கு ரஷீத் கித்​வாய் என்பவர் அளித்த பேட்​டி​யில், “மினி இந்தியாவாக டெல்லி உள்ளது. அங்கு நாட்​டின் அனைத்து பகுதி மக்களும் வசிக்​கின்​றனர். இங்கு வெல்ல முடி​யும் என்றால், எதையும் வெல்ல முடி​யும் என்பதை பாஜக காட்​டி​யுள்​ளது” என்றார்.

பிபிசி நிறு​வனம்: பிபிசி நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்தி​யில், “டெல்லி தேர்தல் பாஜக மற்றும் ஆம் ஆத்மிக்கு க​வுர​வப் ​போராட்​டம். 1998-ம் ஆண்டு ஆட்​சியை இழந்​த​பின் தலைநகர் டெல்​லியை பாஜக கைப்​பற்றியது மிக ​முக்​கியமான வெற்றி” என குறிப்​பிட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x