Published : 10 Feb 2025 06:56 AM
Last Updated : 10 Feb 2025 06:56 AM

வெற்றியை கொண்டாடிய ஆதிஷி: ஸ்வாதி மாலிவால் விமர்சனம்

புதுடெல்லி: ஒருங்​கிணைப்​பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சி​யின் முக்கிய தலைவர்கள் தேர்​தலில் தோல்​வி​யுற்ற நிலை​யில் ஆதிஷி மட்டும் தனது வெற்றியை ஆட்டம் பாட்​டத்​துடன் கொண்​டாடிய வீடியோ சமூக வலைதளங்​களில் வைரல் ஆனது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி​யின் அதிருப்தி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் எக்ஸ் பதிவில் கூறுகை​யில், “என்ன வெட்​கமற்ற வீடியோ காட்சி இது. கட்சி தோற்று​விட்டது. அக்கட்​சி​யின் சார்​பில் போட்​டி​யிட்ட கேஜ்ரிவால், சிசோடியா, சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட முக்கிய ஆம் ஆத்மி தலைவர்கள் அனைவரும் டெல்லி தேர்​தலில் பாஜக​விடம் தோல்வி அடைந்​து​விட்​டனர். ஆனால், எப்படி இதுபோன்று ஆதிஷி மார்​லினா மட்டும் தனது வெற்றியை கொண்​டாடு​கிறார்? இதற்காக அவர் வெட்​கப்பட வேண்​டும்” என்றார்.

டெல்லி சட்டப்​பேரவை தேர்​தலில் ஆம் ஆத்மி கட்சி சார்​பில் கல்காஜி தொகு​தி​யில் போட்​டி​யிட்ட ஆதிஷி, தன்னை எதிர்த்து போட்​டி​யிட்ட பாஜக வேட்​பாளர் ரமேஷ் பிதூரியை 3,500 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தார் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x